பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடு உயரவில்லை 49 என்று தான் சொல்ல வேண்டும். புதுவையிலிருந்து நான் என்னு டன் கொண்டுவந்தவை புஸ்தகங்கள் படுக் கைகள் மட்டுமல்ல ; மாமாவின் இந்த மணி வாசகமும் தான்! கடைசியாகக் கண்டது பிறகு பின்னர் பல வருஷங்களுக்குப் சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக்கொண்டிருந்த போது ஒருநாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்குப் போய்விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கைகால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சரப்பாடு போடும்படி என் மனைவி மீனாக்ஷி யிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறி மாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது தார்சா வில் தூங்குபவர்கள் யார் விசாரித்தேன். வ-4 என