பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) அ ம லா தி த் ய ன் 143 கேள. கொ நாங்கள் ஒரு சபதம் செய்கின்ருேம்-ஆம் ! அகப்பட்டது. உங்கள் வரிசையில் நீங்கள் களைப்படைந்த சமயத்தில்-அதன் பொருட்டு சற்றே விரைவாக வரிசை வாங்கவேண்டும்அவன் தாகசாந்தி கேட்பானுயின் அவனுக்காக ஒரு பான கம் சித்தம் செய்து வைக்கின்றேன் சமயத்திற்கு அதைக் கொஞ்சம் அருந்தியபோதிலும், ஒரு வேளை விஷம் பொருங் திய உன் வாளின் காயத்தினின்றும் அகஸ்மாத்தாய் தப்பிய போதிலும், எப்படியும் நமது எண்ணம் நிறைவேறிவிடும். ஆயினும் பொறு 1-என்ன சப்தம் ? கெளிமணி வருகிமுள். என்ன விசேஷம் கெளரீமணி ? ஒன்றின்மேல் ஒன்ருய் மிதித்துக்கொண்டு வருகின்றனவே துயரங்கள் ; அத்தனை விரைவில் தொடர்கின்றன. ஹா ? லீலாதா, உனது தங்கை நீரில் மூழ்கி மடிந்தாள். நீரில் மூழ்கியா? ஐயோ! எவ்விடத்தில் ? அங் கோரிடத்தில் ஆற்றங் கரை யோரமாக ஒர் ஆலமரம் துளிர்கள் கிரம்பிய கிளைகளெல்லாம் தெள்ளிய தண்ணிரில் பிரதிபிம்பிக்கும்படி குறுக்கே தழைத் திருக்கின்றது. அவ் விடம் ஆம்பல், அரவிந்தம், அசோகு, அரும் புன்னே என்று. சொல்லப்பட்ட அநேக விதமான புஷ்ப மாலைகளை அலங் கோவமாய் அணிந்துகொண்டுவந்து அவள், வளைக் கிருந்த மரக்கிளைகளின் மீது தான் மகுடம்போலணிந்திருந்த மாலை யொன்றை மாட்டும்படி தொத்தி ஏற, பளு பொறுக்க முடி யாது கிளை முறிய, அப் புஷ்ப மாலைகளுடன் அவளும் அப் படியே அரற்றும் அவ் வாற்றில் வீழ்ந்தனள். உடனே அவ ளது ஆடை நீரில் பரவ, அப்படியே அவளை ஆற்று நீரில் அழியாமல் தாங்கி கின்றது சற்று நேரம். அச்சமயத்தில் நீரிலேயே பிறந்துவளர்ந்த சுபாவமுடையவள்போலும், அன் றி தன் நிலையின் துயரத்தைத் தெரிந்து கொள்ளாதவள்போ லும், பழய பாட்டுகளில் அங்கு மிங்குமாக பாடிக்கொண் டிருந்தனள். அப்படி எத்தனே கேரம் இருக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/149&oldid=725145" இலிருந்து மீள்விக்கப்பட்டது