பக்கம்:Chemistry practical and theoretical.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெமிஸ்தம்.


PRINCIPLES OF CHEMISTRY.


முகவுரை.


INTRODUCTION.

1. Matter. நீளம், அகலம், உயரத்துடன் பலரூபமாகவும் நமது புலன்களுக்குத் தோன்றும் எந்தப் பொருள்களும் சடப்பொருள்கள் எனப்படும்.

இயற்கையிலுள்ள பதார்த்தங்கள் எல்லாம் (பிராணி, தாவரம், லோகம்) என்னும் தாது விருப்புகளில் அடங்கும். இவ்வகுப்புகளைச் சேர்ந்த வஸ்துக்கள் எண்ணிறந்தவைகளானாலும் அவை மிகச் சொற்ப தொலையான பூதியங்கள் சேர்ந்துண்டாயின.

2. Simple Substances. இன்னொரு வஸ்துவிலிருந்து பிறக்கக்கூடாததும் வேறு வகையான வஸ்துவாகப் பிரிக்கப்படக் கூடாததுமான தனியஸ்துவுக்கு பூதியம் என்று பெயர்.

கெந்தகம், பொன், வெள்ளி, இரும்பு, அக்சிதம்[1], ஐருதம்[2] என்பவைகள் பூதியங்களுக்கு உதாரணங்களாகும். இவைகள் கூறுகளாகப் பிரிபடவாவது, வேறு பொருளாக மாற்றப் படவாவது, வேறு பொருள்களிலிருந்து உண்டாக்கப்படவாவது கூடாமலிருப்பதால் இவைகள் ஆகியங்கள் எனப்படுகின்றன.

இதுவரையில் எந்தச் சதும் கெந்தகத்திலிருந்து கெந்தகத்தைவிட வேறு எந்த வஸ்துவையாவது, பொன்னிலிருந்து பொன்னைவிட வேறு எந்த வஸ்துவையாவது பிரித்தெடுத்ததில்லை. இவ்வஸ்துக்களை எந்த வகையாயாவது வெவ்வேறு வஸ்துக்களாகப் பிரிக்ககூடுமேயாகில் இவைகளை பூதியங்கள் என்று சொல்லக்கூடாது.


  1. Oxygen
  2. Hydrogen

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chemistry_practical_and_theoretical.pdf/13&oldid=1451529" இலிருந்து மீள்விக்கப்பட்டது