பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234


20அ. மிசோ மாவட்ட மன்றத்தைக் கலைத்தல் :

(1) இந்த இணைப்புப்பட்டியலில் எது எவ்வாறிருப்பினும், குறித்திடப்பட்ட தேதியை ஒட்டிமுன்பு நிலவிவந்த (இதில் இதன்பின்பு மிசோ மாவட்ட மன்றம் எனச் சுட்டப்படும்) மிசோ மாவட்டத்தினுடைய மாவட்ட மன்றம் கலைக்கப்பட்டு இல்லாததாகிவிடும்.

(2) மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் ஆளுகையர் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்குமோ அவற்றில் எதற்குமோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணைகளின்வழி வகைசெய்யலாம்:-

(அ)மிசோ மாவட்ட மன்றத்தின் (அதனால் செய்யப்பட்ட ஒப்பந்தம் எதன்படியுமான உரிமைகளும் கடப்பாடுகளும் உள்ளடங்கலாக), சொத்திருப்புகளையும் உரிமைகளையும் கடப்பாடுகளையும் முழுவதுமாகவோ பகுதியாகவோ ஒன்றியத்திற்கு அல்லது பிற அதிகாரஅமைப்பு எதற்கும் மாற்றல் செய்தல்;
(ஆ)மிசோ மாவட்ட மன்றம் ஒரு தரப்பினராக உள்ள சட்ட நடவடிக்கை எதிலும் மிசோ மாவட்ட மன்றத்திற்கு மாற்றாக ஒன்றியம் அல்லது பிற அதிகாரஅமைப்பு எதனையும் ஒரு தரப்பினராக அமைத்தல் அல்லது சேர்த்தல்;
(இ)
மிசோ மாவட்ட மன்றத்தில் பணிபுரிபவர்கள் எவரும், ஒன்றியத்திற்கு அல்லது பிற அதிகாரஅமைப்பு எதற்கும் மாற்றல் செய்யப்படுதல் அல்லது அதனால் மீண்டும் வேலைக்கமர்த்தப்படுதல் அவ்வாறு மாற்றல் செய்ததன் அல்லது மீண்டும் வேலைக்கமர்த்தப்பட்டதன் பின்பு அத்தகைய பணிபுரிபவர்களுக்குப் பொருந்துறுவதாகும் பணிவரையுரைகள் மற்றும் பணிவரைக்கட்டுகள்;
(ஈ)மிசோ மாவட்ட மன்றத்தினால் இயற்றப்பட்டு, அது கலைக்கப்பட்டதை ஒட்டிமுன்புவரை செல்லாற்றலில் இருந்த சட்டங்கள், அத்தகைய சட்டங்கள் தகுதிறம்வாய்ந்த சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறம்வாய்ந்த பிற அதிகாரஅமைப்பினால் மாற்றமோ நீக்கறவோ திருத்தமோ செய்யப்படும் வரையில், நீக்கறவு அல்லது திருத்தம் செய்தல் வாயிலாக இதற்கென ஆளுகையர் செய்யும் தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டுத் தொடர்ந்து இருந்து வருதல்:
(உ)ஆளுகையர் தேவையெனக் கருதுகிற சார்வுறு, விளைவுறு மற்றும் துணைவுறு பொருட்பாடுகள்.

விளக்கம்:- இந்த இணைப்புப்பட்டியலின் இந்தப் பத்தியிலும், 20ஆ பத்தியிலும் உள்ள "குறித்திடப்பட்ட தேதி" என்னும் சொற்றொடர், 1963 ஆம் ஆண்டு ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள் அரசாங்கச் சட்டத்தின் வகையங்களின்படியும், அவற்றிற்கு இணங்கியவாறும் மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையின் சட்டமன்றப் பேரவை முறையாக அமைக்கப்பட்ட தேதி எனப் பொருள்படும்.

20ஆ மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் இருந்த தன்னாட்சி வட்டாரங்கள் தன்னாட்சி மாவட்டங்களாக இருத்தலும், அதற்கு விளைவுறுதலான மாறும் இடைக்கால வகையங்களும்.

(1) இந்த இணைப்புப்பட்டியலில் எது எவ்வாறிருப்பினும்—

(அ)குறித்திடப்பட்ட தேதியை ஒட்டிமுன்பு மிசோரம் ஒன்றியத்து ஆட்சிநிலவரையில் நிலவிவந்த ஒவ்வொரு தன்னாட்சி வட்டாரமும், அந்தத் தேதியன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/260&oldid=1466524" இலிருந்து மீள்விக்கப்பட்டது