பக்கம்:Saiva Nanneri.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16? கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே I குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரைவ தைத்தமுக மொன்றே வள்ளியைம ணம் புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் யேருளல் வேண்டும் ஆதியரு சைலம மர்ந்தபெரு மாளே." விசயநகர ஆட்சியில் சைவமும் வைணவமும் மேலோங்கி இருந்தன. கோயில்கள் பலவாக வளர்ச்சியும் றன. விசய நகர வேந்தர் சிறந்த வைணவராவர். பிர பந்த, திருமுறை முழக்கம் எங்கும் கேட்டது. வேதாங்க தேசிகர் போன்ருேர் சமய விளக்க நூல்களே எழுதிக் குவித்தனர். அத்வைதிகளும், பாசுபதர்களும், வீர சைவர் களும் இருந்தார்களெனினும் சைவ சித்தாந்த முறையினேப் பின்பற்றும் சைவர்களே சிறக்க வாழ்ந்தனர். சமண, கிறித்தவ சமயங்களும் இக்காலத்தில் வளர்ச்சி பெற்று விளங்கின. மேலே காட்டினர் பலர் வந்து பலரைக் கிறித்தவராக்கினர். இசுலாமும் பரவியது. கன்; வளர்ந்தன. இந்து சமயத்தைக் காத்தற்பொருட்டே விசய நகர வல்லரசு தோன்றியதால் விசயநகர மன்னர்கள் அனைவரும் கோயில் திருப்பணிகளிற் பெரிதும் ஈடுபட்ட னர். இவர்களைப் போன்றே நாயக்க மன்னரும், மராட் டியரும் கோயில் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். சோழர்களால் கட்டப்பட்ட பல கோயில்களே இவர்கள் பழுது பார்த்துச் சீரும் சிறப்பும் பெறச் செய்தனர். கோயில்களுக்கு கிலங்கள் அளிக்கப்பட்டன. கோயிற் பணிகளைச் செம்மையுற கடத்துவதற்கு அறக் குழு வினர் ஏற்படுத்தப்பட்டனர். மேலும் கோயில்கள், தொழும் இடங்களாகவும் மக்கள் பொது வாழ்வு மலர 鄰 தக்க வகையில் துணைபுரிய வல்ல இடங்களாகவும் မိဳ႔ கின. கிராமங்களில் சிறு தெய்வங்கள் பல வழிபடப்பட் டன. அரசினையும் வேம்பினேயும் வைத்து அவற்றின்கீழ் நாகப் பிரதிட்டை பண்ணி வழிபடும் முறையும் இக்காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/172&oldid=729923" இலிருந்து மீள்விக்கப்பட்டது