பக்கம்:Saiva Nanneri.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 விளங்கினர்; சுண்ணும்பு அறையில் அடைக்கப்பட்டும் அஞ்சாது இருந்தார்; கல்லொடு கட்டிக் கடலில் இட்டும் அழுந்தாது கரையேறினர். இவைகளைக் கண்ட பல்லவ மன்னன் மனம் மாறினன். மதமும் மாறினன். சைவத் தைப் போற்றத் தொடங்கினன். அப்பர் பெருமான் மண், பொன், பெண் ஆகிய மூன்று ஆசைகளையும் வென் றவர். தன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த அப் பூதியடிகளின் மகன் அரவு திண்டி இறக்க அவனே எழுப் பியவர். திருமறைக்காட்டுத் திரு ஆலயக் கதவைத் திறக் தவர். ஞானசம்பந்தர் இவரை 'அப்பரே” என்று கூறிப் போற்றினர். தாண்டகவேந்து, திருநாவுக்கரசர், வாகீ சர், ஆளுடைய அரசு என்பன இவரது திருப்பெயர்களா கும். இவர் பல தலங்களே வணங்கிப் பதிகங்கள் பல பாடினர். முன்னர்க் கூறியது போன்று தொண்டைநாடு முழுவதும் சைவ மணம் கமழச் செய்தார். இவர் பாடிய பாடல்கள் காற்பத்தொன்பதாயிரம் என்பர். ஆனல் முன்னுாற்றுப் பதின்மூன்று பதிகங்களே இப்பொழுது உள்ளன. இவரது பதிகங்கள் திருத்தாண்டகம், திருகேரி சைத் திருவிருத்தம், திருக்குறுந்தொகை என்ற தலைப் புக்களைப் பெற்றிருக்கும். திருப்புகலூரில் இவர் இறை வன் திருவடி முேலே அடைந்தார். காலம் முதல் மகேந்திரவர்மன் சைவனை பின் சிவன் கோயில்கள் பல கட்டியிருப்பதை நாம் அறிவோம். இவற் றைக் கட்டுதற்குப் பத்து ஆண்டுகள் வைப்போமாயின் அவன் கி.பி. 680இல் சைவம் புகுந்தான் எனல் அமையும். அப்பொழுது நாவரசர்க்குக் குறைந்த அளவு ஐம்பது வயது இருக்கலாம். எனவே அப்பர் கி. பி. 570-இல் பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து கி. பி. 650-651-இல் சித் திர்ைத் திங்களில் சதய நாளில் இறைவனடி சேர்ந்தார் 'எனக் கொள்ளுதல் ஓரளவு பொருத்தமுடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/88&oldid=730015" இலிருந்து மீள்விக்கப்பட்டது