பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 திக்குப்பாலர்கள் பூசித்த ஸ்தலம் ; ஸ்வாமி-சஹாயேஸ். வரர், தேவி-பெரியநாயகி யம்மை; மங்கள தீர்த்தம், காவிரி நதி. பூர்வீக ஆலயம் உட்பிரகாரம் மிகவும் பழைமை யானது, வெளிப்பிரகாரம் பிறகு கட்டப்பட்டது. ஸ்வாமி அம்மன் சங்கிதிகள் இரண்டும் கிழக்கு பார்த்தவை. பாம்பு தீண்டி யிறந்த அப்பூதி அடிகள் குழந்தையை, அப்பர். உயிர்ப்பித்த ஸ்தலம். கோயிலில் பல கல்வெட்டுகள் உள. தற்காலத்திய அம்மன் சங்கிதி முன்பு விஷ்ணு சங்கிதியா யிருந்திருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. தற்காலம்,விஷ்ணு பரமசிவத்தின் பின்புறம் ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருக்கிருர் விஷ்ணுவின் உற்சவ விக்ரஹம் இங்குள்ளது. விஷ்ணுவின் மூலஸ்தானத்தில் வேணு கோபாலர் இருக்கிருரர். இங்கு வரதராஜருடைய விக்ரஹமு முண்டு. இக் கோயிலிலுள்ள மூர்த்திகளில் பலர் இடம் மாறி யிருக்கிறனர். இதற்குக் காரணம் இங்கு விஷ்ணு வசிப்பதால் என்று குருக்கள்மார் கூறுகின்றனர். வேணு கோபால ஸ்வாமிக்கு உறியடி உற்சவம் நடக்கிறது. திரு ஞானசம்பந்தர் பாடல பெற்றது. பழையாறை :-பழை யாறை வ ட த வி என்பது தேவாரப் பெயர். தஞ்சாவூர் ஜில்லா. பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ளது . சென்னை ரா ஜ த னி சிவாலயம், ஸ்வாமி-சோமேஸ்வரர், தேவி சோமகலா நாயகி. சிவ கங்கை தீர்ங்கம். இது பழையாறை + வடதளி என்று இரண்டு ஸ்தலங்களாயிருக்கின்றன. வடதளிக்கு திருமேற்றளி, என்றும் பெயர். நாயன்மார் இவ்விரண்டு ஸ்தலங்களையும் சேர்த்து ஒரே பதிகத்தில் பாடியிருக்கின்றனர். வடதளி. ஆலய ஸ்வாமி பெயர், வடதளிநாதர், சோமேசர், தர்மபுரி ஸ்வரர், தேவி விமலநாயகி,கெளரியம்மை,சோமகலா நாயகி, உத்திர புஷ்கரணி, காமதேனுவின் புதல்வி விமலி என்ப தால் பூசிக்கப்பட்டது. மேட்டின் பேரில் கோயில்; இங்கு ஸ்வாமி, அம்மன் விக்ரகங்கள் தவிர வேறென்று மில்லே. பழையாறை அமர்நீதி நாயனர் வாழ்ந்த திருப்பதி. திரு நாவுக்கரசு நாயனர் சமணர்களால் வடதளியில் மூடப்பட் டிருந்த சிவபெருமானே அரசனைக் கொண்டு வெளிப்படுத்தி பூசித்த ஸ்தலம். அப்பர் பாடல் பெற்றது. பழையாறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/9&oldid=730479" இலிருந்து மீள்விக்கப்பட்டது