புராணப்போதை
கட்டெறும்பான' கதையாகப் பதினாறு அவுன்சிலிருந்து ஆறவுன்சுக்கும் கீழாக மாறியது மட்டுமல்ல, மனித னைப் பருத்திக்கொட்டையையும், புளியங்கொட்டையை யும், மாடு தின்னும் பிண்ணாக்கையுங்கூடத் தின்று வாழ்ந்திருங்கள் என்று உணவு மந்திரிகள் என்று உலவி வந்த அகிம்சா மூர்த்திகள்(!) உபதேசித்திடும் நிலை கெட்ட நிலைக்கு கலைந்து குலைந்து சீர்கெட்டழிந்து விட்டது!
இயற்கைக் கோளாறுகள் வேறு! பருவ மழை தவறி, பல ஆண்டுகளாக மழையின்றி, மண் வளம் வேறு குன்றி, குறைந்து விலை பொருள் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் குறைந்துவிட்டன என்பதையும் கவனித் துக் கொண்டுதான் இத்தகையப் பேச்சை பேசுகிறோம் என்பதை முதலில் கூறிக்கொள்கிறேன்.
விளையும் பொருள்களையும், தேவைப்படும்பொருள் களையும், சர்க்காரால் கொள்முதல் செய்யப்படும் பொருள்களையும், இடையிலே எப்படியோ கொள்முத லாகாமல் விட்டுப்போகும் பொருள்களையும் எண்ணிப் பார்த்தால் சர்க்காரே தரும் புள்ளி விவரங்களைக் கொண்டு பார்த்தாலேயேகூட, சர்க்காரில் சரியானபடி கொள்முதல் செய்யாத குறையாகும், போக்குவரத்து, உணவுப் பொருள் பாதுகாப்பு, நடுவில் ஏற்படும் சேதம் போன்றவைகளின் அளவுப் பெருக்கு பற்றிய கவனக்குறைவு ஆகியவைகளே தான். உணவுத் தட்டிற் குத் தடங்கல்கள் என்பது புலப்படாமற் போகு
56