உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி

கேள்விகள் கேட்டிடும் நேரத்திலே, நெஞ்சம் திடுக் கிடும் நினைவுகள் வந்து நம்மை வாட்டத்தான் செய் கின்றன.

நாட்டிலே பட்டினிப் பட்டாளங்களைக் கட்டிக் காத்திடக் கஞ்சித் தொட்டிகள் ஒரு பக்கம் திறக்கப் படுகிறது, ஆட்சியாளர்களால்!

அதே நேரத்தில், நல்ல அரிசி வேண்டுமா! விலை அதிகம் கொடுத்து வாங்கிக் கொள், புழுத்த அரிசி வேண்டுமா? போ ரேஷன் கடைக்கு என்று நேரடி யாகக் கூறாது, சுற்றி வளைத்துத் திட்டமிட்டுக் கட்டுப் பட்டுக் கிடக்கும் முறைதானே, நிலைதானே, பங்கீடு ஒழிக்கப்பட்ட பின்னர், மக்களின் நிலை!

ஏன் பதினாறு அவுன்சு கொடுக்கக் கூடாது, கொள் முதல் சரிவரச் செய்யுங்கள், மிட்டா, மிராசு, பண்ணை முதலாளி பக்கம் சாய்ந்து, சரிந்து, குனிந்து கொடுக் காதோ என்றெல்லாம் மக்கள் எழுப்பிய குரலுக்குப் பதில் நடவடிக்கையா ? இது பங்கீடு ஒழிப்பு?

என்னைக்

கேட்காதே, எனக்கேன் இந்தத் தொல்லை, எக்கேடாவது கெட்டுப்போ,' என்று வேலை யின்றி,வாடி வழி, வகையின்றி வாடுவோருக்குத் தரும் நிவாரணமா? நாசத்திற்கான நயவஞ்சகத் திட்டமா?

பகட்டாக, பணக்காரராக வாழ்வேரருக்குத்தானே வசதி, இதனால்?

ஏழை எங்கே போவான், அதிக விலைக்கு அரிசி வாங்க!

63