உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

வழியிலே, பலவிதமான வடிவும், வண்ண நிறங் களும், சிறிதும் பெரிதுமான மோட்டார்களைக் காண் கிறான்?

'என்னப்பா அது, சிறுவனின் கேள்வி !

'சீ, வாடா சும்மா!' என்று சிடு சிடுத்துச் சீறி விழு வார், சில பெற்றோர்கள்.

வேறு சிலர், 'மோட்டார், உனக்கென்னத்துக்கடா இதெல்லாம், என்று சலித்துக் கொள்வார். தமது ஏழ்மை வாழ்வை யெண்ணி மனம் குன்றி யிருக்கும். நேரத்தில்.

மற்றும் பலர், 'மோட்டார்கார், பார். என்னா ஜோரா யிருக்கு என்பார்கள்.

சிறுவன் சற்று சுறுசுறுப்பும், சூட்சும புத்தியும் படைத்தவனாக இருப்பின், 'கார் எப்படிப் போவுது என்று கேட்பான்'

இக்கேள்விக்குப் பொறுமையோடு பதில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, பெரும்பாலான பெற்றோர் களுக்கே பதில் தெரியாத கேள்வியு மாகும்.

பதில் தெரிந்து கொள்ளும் எண்ணமோ,எண்ணிப் பார்த்திடும் நிலையோ, நினைப்போ, இல்லாத சூழ்நிலை அவர்கட்கு என்று எண்ணிக்கிடப்பது தவிர வேறென்ன காரணம் இதற்கு?

70