உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

நாட்டு மக்களின் கூட்டுக் காரியங்களிலே, முயற்சி களிலே ஏன் கலந்து கொள்வதில்லை, பலர் பல மக்கள்!

வாழ்விலே அத்தகைய சோகம், சோகம் மட்டு

மல்ல, சோகமாகவே வாழ்ந்தால் நல்லது, நிம்மதி, இருக்கிற நிம்மதியான வாழ்வாவது கெட்டுப் போகாது தங்கும், இப்பிறப்பில் இல்லாவிட்டாலும் அப்பிறப்பி லாவது (மறு பிறப்பிலாவது) நல்ல கதியடைவோம் என்று தம்மைத்தாமே தற்குறிகளாக, தன்மானமற்றவ ராக, ஏன் சில பல நேரங்களில் தாழாவெட்டிகளாகக் கூட ஆக்கிக் கொள்கின்றனர்.

பிறரது

முன்னேற்றத்தைப் பார்த்துப் பெரு

மூச்சு விடுவதோடு சரி பலரின் நிலை!

தமது தாழ்வுக்குக் காரணம் தமது அறியாமை என்று உணரவே மறுத்து, 'தமது தலைவிதி' என்று கூறிக்கொள்கிறார்களே மக்கள், அது ஏன்?

'தலைவிதி யாரைவிட்டது! அரிச்சந்திர மகாராஜனே கஷ்டப்பட்டானே! மகாராஜன் மயானத்திலே பட்ட பாடு கொஞ்சமா! மகனை, மனைவியைக்கூட விற்றுவிட் டானே!' என்று தலைவிதியை எண்ணிப் பயந்திருக்கிறார். களே, அந்தத் தலைவிதிதான் என்ன?

ஏன், தலைவிதி பலரையும் பாழ்படுத்திச் சீரழித்துப் படாத பாடு படுத்துகிறது?

'தலைவிதி' என்றால் என்ன? தலைவிதித் தத்து வத்தை. அதன் கோர விளையாட்டை, விளைவை விளக்கப் பெரும் பெரும் புராணங்களும், புண்ணிய

74