புராணப்போதை
புராணம், இன்னும் எது எதுவோ, எத்தனை யெத்தனை ஆண்டவன் அவதாரங்களோ அத்தனைக்கும், எல்லா ஸ்தலங்களுக்கும் ஒன்றல்ல, பலப்பல புராணங்கள். ஒன்றுக்கொன்று முரண்பட்டவை களாகக் கூடக் காணப்படுகின்றன!
கருட புராணத்திலே, மனிதர் எந்தெந்தத் தவறு களைச் செய்தால், நரகத்தில் எத்தகைய கொடூரங்களை யெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதும், எந்தெந்த தானங்களை யார் யாருக்குச் செய்தால் அந்தரலோகத் துச் சுந்தர வாழ்வாம், சொர்க்க வாழ்வு வாழ்ந்திட முடி யும் என்ப தெல்லாம் வர்ணிக்கப்பட் டிருக்கின்றன!
பெரிய புராணத்தைப் பற்றி எவ்வளவு கூறினா லும் விடியாது!
மனைவியையே மகேஸ்வரனுக்குத் தானம் வழங் கிய பக்தனையும், இயற்பகை நாயனாரையும், அவ்வித மனைவித் தானங் கேட்ட தயாபரனையும் படிக்கிறோம்!
பேசும் பொற் சித்திரமாம். பிள்ளைக் கனியமுதாம். பெற்ற பிள்ளை சீராளனையே -சிவனாரின் சிவவேடம் கேட்டருளியபடி, சிறுவன் சீராளனைக் கண்ட துண்ட மாக வெட்டி வேகவைத்துப் படைத்து பக்திக் போதை யில் திளைத்த சிறுத் தொண்டரைக் காண்கிறோம்!
இதனைப் படித்துப் படித்துப் பாடிப் பாடிப் பர வச மடைந்து மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்து வியர்த்து அங்கமெலாம் பொங்கிப் பூரித்து ஆலவாயப்பனின் அருட்சோதனையை எண்ணி யெண்ணி மகிழ்ந்தாடும்
8230