உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:TVA BOK 0024505 புராணப்போதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை

ஆபாசக் களஞ்சியம், அர்த்தமற்ற அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் பொருந்தாத விபரீத உடல் உறவுகள். உற்சாகக் களியாட்டங்கள்.. கேளிக்கைக் கோலாகலங்கள்! இவைகள் தானே பெரும் பாலான புராணங்கள் என்று நாட்டிலே கூறப்படுவன! வேறென்ன!

எதற்கெடுத்தாலும், எந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கும் ஒரு புராணம், பழையகதை இருக்கத்தானே இருக்கி றது இந்த நாட்டில்? மக்களின் உள்ளங்களிலே பதிந்து போதையேறிக் கிடக்கிறதே!

காக்கை கறுப்பு ஏன், அதற்கொரு புராணம்! யானைக்குத் துதிக்கை இருப்பது ஏன்? அதற்கொரு சாமிக்கதை! கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? ஒரு புராணம்! அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப் பானேன், அதற்குமொரு கதை இராமனுடன் சம்மதப் படுத்தி!

அய்வேலங்காயின் விதை லிங்க வடிவமாக இருக் கிறதே! இது தெரியாதா என்று ஆரம்பித்து, பஸ்மா சுரனைப்பற்றிய கதையை ஆரம்பிப்பார்கள்!

அய்வேலங்காயின் விதை சிவலிங்க வடிவாக இருக் கிறது இதற்கு என்ன காரணம் தெரியுமா? மக்கள் பெரும் பகுதியினரானபாமரரிடையே பரவியிருக்கிறது!" அதை எண்ணிப் பார்த்தாலே மிகவும் விசித்திரமாகவும், வேடிக்கையாகவுங்கூடக் காணப்படுகிறது, கடவுளின்

86