கருணாநிதி
கண்மூடித்தனமும், கடவுள் என்ற நிலையிலே கடவுள் கள் செய்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகளும்!
கேளுங்கள் அந்த வேடிக்கைக் புராணத்தை!
கதையை
பஸ்மாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தானாம். அசுரன் என்றால் ஈவு, இரக்கம், நல்ல நினைப்பு, நடப்பு எதையுமே செய்யாதவன் மட்டுமல்ல, செய்யவே தெரி யாதவன் என்றெல்லாம் பொருள்படும் புராண, புண் ணிய ஏடுகளின் அகராதிப்படி!
அத்தகைய கொடியவன், கோர நினைவுகளிடையி லேயே நித்திய வாழ்க்கையையும், நடைமுறைகளும் நடத்தி வரும் பொல்லாதவன் பரமசிவனை நோக்கித் தவம் செய்தானாம்.
தவம்! சாதாரண தவமல்ல! சர்வேசுரனின் மன தைக் குளிர வைத்து அவன் முன் தோன்றிக் காட்சி யளித்திடும் நிலைமைக்குக் கைலாசபதியைக் கொண்டு வந்த கடுந்தவம் புரிந்தானாம்.
பஸ்மாசுரனின் தவத்திற்குத் தலைவணங்க வேண் டிய அளவு அவனது தவம் தூய்மை உள்ளதாக இருந் தது என்பதுதானே, தயாபரன் அந்த அரக்கனுக்குக் காட்சி யளித்தமைக்குப் பொருள்; விளக்கம்!
எப்படியோ, பஸ்மாசுரனுடைய தவத்தின் மகிமை யால், மேன்மையால் காணற்கரிய கடவுள், கைலை நாதன், சிவபெருமான் அவன் முன் தோன்றினார்.
87