பக்கம்:Tamil varalaru.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயக்கொள்கை பண்டைக் காலத்து அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து, வான்ருேய் கல்லிசைச் சான்ருேர் பலரைத் தந்தலை நகர்க்கட் டொகுத்துப் போற்றித் தமிழாராய்ந்த பெருஞ் சிறப்பாற் றனியே தமிழுடையாரென்று பாண்டிய குலத்தோர் புகழப் படுவரேனும் தமிழ் காத்த பெருமை தென்னட்டு வேந்தர்க்குப் பொதுமைத்தாமென்பது 'தமிழ் கெழு மூவர் காக்குமொழி' (அகப்பாட்டு. 31) எனவும், வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், காற்பெயரெல்லே யகத்தவர் வழங்கும், யாப்பின் வழியது' (தொல்காப்பியம். செய்யுளியல்) எனவும், தொன்மை இலக்கிய விலக்கணங்கள் கூறுத்லான் அறியலாம். இம் மூவர் காத்து வளர்த்த பழந்தமிழிலக்கிய விலக்கண்ங்களிற்ருன் இவர் குடிப்பிறப்பு, அரசியல், தாயமுறை. வள்ளன்மை, கொள்கை முதலிய பல வ ழ க் கங்க ளு ம் நன்கறியப்படுவனவாம். இத் தொன்னுால்களுட்டொல் காப்பியம் என்னும் பேரிலக்கணமே தமிழர் வழக்கங்களே இனி தெடுத்துக் காட்டற்குத் தலைசிறந்த கருவியாகும்; இத்தொல்காப்பிய நூ லுட் கூறப்பட்ட கொள்கை கள் தமிழ் மூவேந்தர்க்கும் அவர் குடி மக்கட்கும் பெரும்பான் மையும் பொதுவாய் கிகழ்ந்தனவேயாகும். இப்பல கொள்கை களுட்டமிழர் தாய முறைமையுமொன்று. தாயம் என்ற சொல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னே இத்தமிழ் நாட்டு வழங் கியது என்பது அவர் 'தாயத்தினடையா" (பொருளியல். 25) எனக் கூறுதலான் அறியத் தக்கது. தமிழ் நான் முழுது முணர்ந்து இந்நூ ற்கு உரை கூறிய உரையாசிரியர் சண்டுத் "தாயத்தானெய்துதலாவது தந்தை பொருள் மகற்குறுத' லென்றுரைத்தார், நச்சினர்க்கினியரும் "தாயத்தினடையாதந்தையுடைய பொருள்களாய் மக்களெய்து தற்குரிய பொருள் களிற் சேராதனவாய்' என உரைத்தார். இவ்விருபேருரை யாளரும் இவ்வாறு ஒருதலையாகக் கூ று த ற் கு க் காரணம் பண்டைத் தமிழ் நாட்டு வழக்கங்களேக் கூறிய தமிழ்ப் பெரு நூல்களில் மக்கட்டாய முறையல்லது வேறு தாய முறையில்லா மையே என எ ளி தி ல றி ய லா கு ம். இத்தொல்காப்பியத்து உலகியல் கடத்த்ற் கண்ணும் இவ்வுலகத்தை விட்டு வீடு விரும் பிக் காடு புகுந்து துறவுள்ளத்து முயறற்கண்ணும் எழுந்த குத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/141&oldid=731294" இலிருந்து மீள்விக்கப்பட்டது