பக்கம்:Tamil varalaru.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை தொல்காப்பியனுர், நூலிற்கும் வழக்கிற்கும் இன்றியமை யாத சொற்களின் ஒலி உறுப்புக்களே எழுத்தென்று பெயரிட்டு அவற்றைப் பிறப்பானும் அளவானுந் தனியே இயங்குதலானும் இயக்கப்படுதலானும், ஒலியின் வன்மைமென்மை, சமநிலைகளா தும் பலதிறப்படுத்தி அவற்றின் உண்மை நிலைகண்டு விளக்கிய இயல்கள் நான் மரபென்றும், மொழிமரபென்றும், பிறப்பியல் என்றும் பெயர் பெறும் நூல் மொழியையின்றி அமையாமை யானும், மொழி எழுத்தை யின்றியமையாமையானும், இவை ஒருவர் ஆக்கியன ஆகாது இந்நாட்டு வழங்கிய மரபு வழிப் பட்ட இலக்கணத்தை உடையன என்றற்கு நூன்மரபு, மொழி மரபு என்று பெயரிட்டு ஆண்டார் என்க. இவ்வாறே மரபு கூறு மிடமெல்லாம் இவர்க்கு இதுவே கருத்தாதல் உணர்க. இவர் வழக்கினுஞ் செய்யுளேயே தங்கருத்திற்கொண்டு அதற்குப் பண் டைத் தமிழர் வழங்கிய இலக்கண வரம்பின்னத் தம் நுண்ணறி வா ற்கண்டு, அப்பழைய செய்புள் வழக்கு கெறி இகவாமை கருதிக் காக்கின் ருராதலின் அக்கொள்கை புலப்படப் பல்லிடத் துந் தங்கூற்ருற் கூருது என்மனர் புலவர்” என்பதுபோல முன்னுேரை எடுத்துக் கூறுதல் இவர்க்கு வழக்காகும். இவர்க்கு முன் னிருந்த பெருந்தமிழ்ப் புலவர் பலரும் விழுமிய பொருளோடு இசை இன்பத்தையும் முதன்மையாகக் கருதித் தஞ் செய்யுளே ஆக்கியத&னத் தம் நுண்ணிய செவிப் புலனுற் கண்டு, அவற்றின் மாத்திரைகளே அவ்வவ்விட கோக்கி அளந்து, எழுத்துக்களின் ஒ. பி இன்ன இன்ன அளவிற்றெனப் பகுத்தோதுதல் காணலாம். எழுத்துக்கள் தம் மாத்திரையினளவின் டேலுங் குறைதஅஞ் செய்யுட்கண் இன்னுேசைபற்றி வேண்டப்படுதல் அல்லாமல் இவர் காலத்துக்கு முன்னே சில சொற்களின் முதல் இடை கடைகளிலும், சில சொற்ருெடர்களிலும் இயல்பாகவே சிற்சில எழுத்துக்கள் தம் அளவிற் குறைந்து வழங்கப்பட்டனவென்று இவர் குறிப்பது காணலாம். இவர் இகர, உகர, ஐகார, ஒளகார 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/305&oldid=731475" இலிருந்து மீள்விக்கப்பட்டது