பக்கம்:Tamil varalaru.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 த மி ழ் வ ர ல | று கொள்க. சினதேயம் ஒருவாறு இயையுமேனும் ஆண்டுக்திசைப் பெயர் கிலத்தோடு பொருந்தாமை கேட்டறிக. வடமொழியாளர் தாம் வதிந்த வடதிசையைப் புண்ணிய திக்கென்றும் ஆண்டுள்ளாரே சுவர்க்கம் புகு தற்குரியரென்றும் பாராட்டித் தென்றிசையை அவாக்' என்றும் சாவைப்புரியுங் கூற்றுவன் திசை (யமதிக்) யென்றும் இழித்துக்கூறுவர். இதைக் கண்டு தமிழர் சுவர்க்கம், நரகம் இவற்றிற் புகுதற்குத் திசை கிலங் காரணமாகாதென்றும், அவரவர் வினேயே காரண மென்றும், தென்னட்டவரும் சுவர்க்கம் புகுவரென்றும், வட நாட்டிலும் நரகம் புகும் வீனர் பலருளரென்றும், சொல்லி அவர்க்கறிவுறுத்திய தமிழ்ப்பாடலும் கீழ்க்கணக்கில் உண்டு. அப்பாடல் வருமாறு: "எங்கிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காய் தெங்காகா தென்னட்டவரும் சுவர்க்கம் புகுதலால் தன் ளு ற்ரு குைம் மறுமை வடதிசையுங் கொன் னுளர் சாலப்பலர்' (நாலடி. 343.) மற்று, அவர் தென்றிசையை அவாக்கென்றது, தங்கள் வாக்கு அல்லாத வாக்கு (வாய்மொழி) உடைமையான் என்று எளிதில் உணரலாம். தமிழல்லாத வாய்மொழியுடைமையால் தமிழருக்கு வடக்கும் அவாக்காகுமென்க. ஆசிரியர் கூறுக் தமிழை ககைச்சுவைக்கு மெய்ப்பாட்டியலிற் (குத் உரை) பேராசிரியர் எடுத்துக்காட்டலான் இதனுண்மை புணரலாம். தமிழர் தாம் வதிந்த தென்றிசைக்குரிய 'தென்' என்னும் மொழியை எந்த இழிபொருளிலேயும் வழங்காது, அழகு, கற்பு, இசை, இனிமை முதலிய உயர் பொருளிலே வழங்கி அதன் பெருமை பாராட்டிக் காட்டுதல் நன்கறியலாம். - 'மதனன் தன் தென்னிருருவம்' (தேவாரம். 1155) என் லுமிடத்துத் தென் அழகுக்கு வந்தது. 'தென்னிசை பாடும் பாணன்' (திருவால. திருவிகள. 567) என் புழி இனிமைக்கு வந்தது. இசைபாடும்போதெல்லாம் இத் தமிழர் 'தென்ன தென்ன தென' எனப்பாடிவந்தனரென் பதும் ஈண்டைக்கேற்ப கோக்கத்தகும். தென்னன் என்பது தென்றிசையாண்ட பாண்டியன் பெயராதலானும், அவன் இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/34&oldid=731513" இலிருந்து மீள்விக்கப்பட்டது