பக்கம்:Tamil varalaru.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. தமிழ் வ | ல | வ எனச் செந் தமிழ்ப் பாண்டி காட்டை இனிய தென்றமிழ் காடென்று கூறி, அஃது சிறப்பாக முத்தும் முத்தமிழுடைமையுங் கூறுதல் காண்க. அதற்கேற்பவே காடவிட்ட படலத்தில், தென்றமிழ்நாட்டகன்பொதியிற். றிருமுனிவன் றமிழ்ச்சங்கஞ் சேர்கிற் பீரேல்' (30) எனவுங் கூறுதல் காண்க. இதன்கண்ணே தென்றமிழ் காட்டின் கண் பொதியிற்றிருமுனிவன் தலைமையிலுள்ள தமிழ்ச் சங்கம் எனப் பொருள் கொள்ள வைத்தது காண்க. இனித் திருவள்ளுவர் திருக்குறளுக்குப் பாயிரமாகவுள்ள பல பழைய பாடல்களினிடையே, "வாளர் நெடுமாற வள்ளுவர் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு' என வருவதனேக காணலாம். இவ்வடிகள் பாண்டியனே விளித்து வள்ளுவர் திருவாயாலேயே தாம் நேரே கேட்டறிந்த உறுதிப் பொருள் கான்கையும் வகுத்து விளக்குகின்றதென்பது திண்ணம். இது ஒரு பொய்யே கட்டிப் பேசியதாகக்கூறுதல் இயையாது. இதல்ை திருக்குறள் அரங்கேறியது பாண்டியன் அவையகத்தென்றும் ஆண்டுப் பல புலவரும் உடனிருந்து கேட் டனரென்றும் கேட்டார் பலர் பாயிரஞ் சொற்ருரென்றும் தெரி யலாகும். இத்திருவள்ளுவ மாலையை எடுத்தாண்டது கேமிநாத நாலுரை ஆகிய வயிரமேக விருத்தியாகும்." == அதன்கண் "உப்பக் கநோக்கி' என்னும் பாட்டை (திருவள். மாலை) எடுத்தாண்டு உபகேசியார் கப்பின்னேப் பிராட்டியார் என உரைத்ததுகாண்க. இவர் உரை வன்மையும் பழைமையு நன்கறிக. திருவள்ளுவரைத் தேவரென்று நச்சினர்க்கினியர் முதலிய நல் லுரையாளர் வழங்கற்கும், பரிமேலழகர் சேவைரையர் முதலி யோர் தெய்வப்புலமைத் திருவள்ளுவர், தெய்வப் புலவன் திரு வள்ளுவன் என்றற்கும், இத் திருவள்ளுவமாலேயே மேற்கோளா தல் உணர்க. இக்கருத்திற்கியையவே 'இயம்பின இன்றிவ ரின்குறள்வெண்பா' என்பதல்ை இன்று இவர் இயம்பின எனக் "இவ்வுரை a. Gus விருத்தி என்பது Travra:55 பண்டித மு. இராகவையங்காரவர்களால் வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/64&oldid=731575" இலிருந்து மீள்விக்கப்பட்டது