பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

3.Colliseum at Rome: ரோமாபுரியிலுள்ள பண்டைய திறந்தவெளி அரங்கு. அதில் 50,000 பேர் உட்காரலாம். மற்றும் 20,000 பேர் நிற்கலாம்.

4.The Taj Maha at Agra:இந்தியாவில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால். இது முழுவதும் சலவைக்கற்களால் கட்டப்பட்டது. பேரரசர் ஷாஜகானால், தம் மனைவி மும்தாஜ் மகாலின் இறந்த உடலின்மீது எழுப்பப்பட்ட சமாதி. தொடங்கப்பட்ட ஆண்டு கி.பி. 1631: முடிவடைந்த ஆண்டு கி.பி. 1653. ஷாஜகான் மும்தாஜ் மகாலைக் கி.பி. 1612இல் மணந்து கொண்டார். அவள் கி.பி. 1631இல் மகப்பேறு காரணமாக இறந்துவிட்டாள். அவர்கள் மிகச் சிறந்த காதலுடனும் அன்புடனும் வாழ்ந்து வந்தனர். 5.The AngorwatinCambodia:அங்கோர்வாட்டில் உள்ள சூரியவர்மன் கட்டிய கோயில். சூரியவர்மன் ஆண்ட காலம் கி.பி. 1112 - 1152 வரை. இதில் இராமாயணம், மகாபாரதம் கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

6. Shwe Dagon in the Outskirts of Rangoon: QussarGamu Jib Glåmsdoru. புத்தபிரானார் கோயில். பர்மாவின் தலைநகரான இரங்கூனுக்கருகில் உள்ளது. காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு.

7. The Leaning Tower of PISA: பைசா நகரம் இத்தாலி நாட்டில் உள்ளது. அக்காலத்தில் கட்டப்பட்ட சாய்வுக்கோபுரம் அடித்தளத்தில் ஏற்பட்ட கோளாறி னால் சாய்ந்து நிற்கிறது. இன்று மேலும் சரிந்து கொண்டு வருகிறது. அதைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காலம் கி.பி. 1164 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உயரம் 188 அடி (56.40 மீ.) செங்குத்து உயரத்தி லிருந்து 16 அடி (4.30 மீ) சாய்ந்துள்ளது. என்றைக்குச் சரிந்து பூமியில் விழுமோ என்ற நிலையில் உள்ளது. இப் பைசா நகரச் சாய்வுக் கோபுரம், அறிவியல் அறிஞர் கலீலியோவினால் (கி.பி.1564-1642) கி.பி. 15ஆம் நூற்றாண்டு விஞ்ஞானப் பரிசோதனைக் காகப் பயன்படுத்தப்பட்டது. அவர் இரண்டு கற்களை ஒன்று பெரியது மற்றொன்று சிறியது - ஒன்று கனமானது. மற்றது கனம் குறைந்தது. பைசா நகரச் சாய்வுக் கோபுரத்தின் மீதிருந்து கீழே அவற்றை ஒரே சமயத்தில் நழுவவிட இரண்டும் ஒரே ஒலியுடன் தரையில் விழுந்தன. இதன் பிறகு பைசா நகரத்துச் சாய்வுக் கோபுரம் பெரும்புகழ் பெற்றுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/470&oldid=531539" இலிருந்து மீள்விக்கப்பட்டது