பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

collectively, toțigib osog Gunủ tą supäigula Gib collector, collectorate ஆகிய இவை யாவும் collect என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சொல்லின் அகராதிப் பொருளை மட்டும் அறிதல் போதாது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தரப்படும் பாடப் பயிற்சிகள், பின் வரும் சொற்களையும் சொற்றொடர்களையும் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது", என்பது அவர்களுக்குச் சொற்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது பற்றித் தெளிவான விளக்கம் அவர்கள் மனத்தில் ஆணி அறைந்தாற்போலப் பதிந்து விடும் அல்லவா?

ஒவ்வொரு நாளேடும், மேலும் சொற்களையறிவத்ற்காகச் சிறு பகுதி ஒன்றையும் வெளியிடுகிறது. ஹிந்து வார இதழில் மூளையைப் பயன்படுத்து" எனும் பகுதி அத்தகைய சொல் ஆட்சியை விரிவுபடுத்தும் பகுதியேயாகும். மற்றொன்று Header's Digest என்பதில் காணப்படும் 'உங்கள் சொல்லாக்கத்தைப் பெருக்கமடையச் செய்யும் பகுதியாகும். மற்றும் சில நாளேடுகள் " ஆங்கிலத்தில் சில பாடங்கள்" என்றும் வெளியிடுகின்றன. மேலும் நல்ல ஆங்கிலம் தெரிந்து கொள்ளுங்கள்" என்னும் பகுதியும் இவற்றைச் சார்ந்ததே ஒவ்வொரு நாளும் ஒரு சொல்" என்ற தலைப்பில் வெளியிடும் சிகாகோ-சன்-டைம்ஸ் சிண்டிகேட்டும், "நாம் ஏன் இவ்வாறு சொல்லவேண்டும்?" என்ற தலைப்பில் வெளியிடும் ஜெனரஸ்ஃபீசர்ஸ் கார்ப்பொரேஷன் அவர்களின் சொற்களும், ஒருவருடைய சொல்லாற்றலை அறிவதற்கு நல்ல பயிற்சியாக விளங்குகின்றன.

மேலே கூறப்பட்ட எல்லாப் பகுதிகளையும் கூர்மையாகப் படித்த பிறகும், இவை போன்ற மற்றவற்றைப் படித்த பிறகும் ஒருவர் தாம் படிக்கும் பொழுதும், நூலகம் ஒன்றுக்குச் சென்று படிக்கும் பொழுதும், தம் சொல்லாட்சியை மேலும் விரிவு செய்து கொள்ளக் கூடும்.

ஒரு சொல்லின் பொருள், ஒருமுறை படிப்பதனால் மட்டும் தெரியவருவதில்லை. பல சந்தர்ப்பங்களில் பல நூல்களில் உள்ள சொற்களை அறியும் பொழுது, மேலும் அவற்றின் பொருள் அறியப்படும். அதன் காரணமாகத்தான் பரவலாகப் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நோக்கத்தைக் கொண்டே, துணைப்பாடப் புத்தகங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

சொற்களைப் பயன்படுத்துவற்கும், மரபுத் தொடர்களைப் பயன்படுத்துவதற்குமான சில வழிவகைகளே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. மிக்க ஆர்வத்துடன் கற்பவர் ஒருவர், மேலும் சில வழிகளை அறிய ஆவல் கொண்டு, அவற்றை வெற்றிவாகை

க.ம்ெ வங்கையில் வர்வக்கடன் கேடிப் பயன்பெmவார்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/8&oldid=531075" இலிருந்து மீள்விக்கப்பட்டது