பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/417

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

முன்பெல்லாம் பனி, மழை, வெய்யில் போன்றவற்றிற்கும் விலங்குகள் போன்றவற்றிற்கும் தப்பித்துக்கொள்ளவே தற்காப்புத்தேடி வீடுகளைக் கட்டினார்கள். இன்று பக்கத்து விட்டானைப் பகைவனாக்கி அவனை நம்பாமல் திருடனாக்கி அயோக்கியனாக்கி அவனிடம் இருந்து நம்மை நாம் காப்பாற்றவே வீடுகளை எழுப்புகிறோம். களவு காவல் என்ற தத்துவ அடிப்படையில் வீடுகளைக் கட்டுகிறோம்.

இந்த நிலை மாறவேண்டும். மாற்றத்தைக் கலைகள் போதிக்க வேண்டும். மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வேண்டிய நல்லுணர்வுகளைக் கலைகள் காட்ட வேண்டும்.