பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/442

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

வழிபாட்டிற்குச் சாதி தடையாய் இருக்கக்கூடாது. பசித்தவன் சோறு பெற்றுப் பசி நீங்கி மகிழ்ச்சி நிறைவு கொள்ள வேண்டும். அதுபோலவே கோவிலுக்கு வருகிறவர்களும் அருள் வெள்ளத்தைப் பருகி, ஆன்மதாகம் நீங்கி நிறைவுபெற வேண்டும். அதற்கு மொழிச் சுவரோ, இனச்சுவரோ, சாதிச் சுவரோ தடையாயிருக்கக் கூடாது.