பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/118

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் தம்முள் முரண்பட்டவையும் அல்ல; உடன்பட்டவையும் அல்ல.

சில மாறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. இந்த மாறுபாடுகள் தத்துவங்கள் தோன்றிய காலம் காரணமாகவும் அமைந்திருக்கலாம்.


அல்லது உண்மையான மாறுபாடுகளாகவும் இருக்கலாம்.

சைவ சித்தாந்தம் கடவுளை நம்புகிறது. மார்க்சியம் கடவுளை நம்பவில்லை. இஃது ஒரு முக்கியமான வேறுபாடு. மற்றபடி உலகத்தின் தோற்றம், உயிர்களின் நிலை, இந்த உலக வாழ்க்கை உழைப்பின் சிறப்பு, உழைப்பாளர் தகுதி ஆகியவற்றில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் ஒன்றுபடுகின்றன.