பயனர்:ஐயோன்
இங்கர்சால்
[தொகு]இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 20 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 16 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.
இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.
இவர் வள்ளுவர் வள்ளலார் வட்டம் என்ற குழுவை உருவாக்கி, இணையவழியில் தன்னார்வலர்களைத் திரட்டி, நிகண்டியம் எனும் திட்டத்தின் மூலம் 300 அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை இணைத்து நாள்தோறும் சொற்களை உருவாக்கி வருகிறார். பல்வேறு சொல் அறிஞர்களின் தளத்தில் இருக்கும் சொற்களையும் திரட்டியுள்ளார். இவ்வாறாக இதுவரை 16-இலட்சம் சொற்களைச் சேகரித்துள்ளார்.
இரண்டரை இலட்சம் தமிழ் சொற்கள் இல்லாத ஆங்கில சொற்களைச் சொற்குவை அகரமுதலி திட்டத்திற்கு கொடை அளித்துள்ளார். கிளாஸ்பே எனும் Ai கணினி நுண்ணறிவு மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு 4லட்சம் சொற்களைப் பரிசளித்து. தமிழ் மொழியை உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வழியை ஏற்படுத்தியுள்ளார். இதன்வழி உலகில் எந்த மொழியினர் ஆனாலும் தமிழை ஆராய சுவைக்க வழிவகை செய்துள்ளார்.
தமிழ் கார்பஸ் எனும் 40 லட்சம் தமிழ் சொல் தகவல்களைத் திரட்டிப் பல்வேறு ஆய்வுகளைச் செய்துவருகிறார். உதாரணமாக அதில் இருக்கும் ஊர் பெயர்கள் எவை, இலக்கிய ஊர் பெயர்கள் எவை வடுகர் ஆட்சிக்குப் பிறகு சூட்டப்பட்ட ஊர் பெயர்கள் எவை, சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ஊர் பெயர்கள் எவை என்று பல கோணத்தில் தமிழர் தகவல்களைத் தொழில்நுட்பம் வழி ஆராய்ந்து கொண்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் தமிழை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறார்.
தமிழ் பணிகள்
[தொகு]- நோர்வேயின் கிறிஸ்டியன்சாண்டு நகரத்தில் தமிழ் பள்ளி நடத்துகிறார்.
- இணைய வழி ஊடாட்டுக் கல்வி (interactive learning) முறையை உருவாக்கி வருகிறார்.
- வள்ளுவர் வள்ளலார் வட்டம் குழுவின் வழியாக தமிழ் சொல்வளம், இலக்கியம், கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.
- 400+ அகராதிகளை மின்னாக்கம் செய்துள்ளார்:
* தமிழ் ⇆ தமிழ்: 5,87,528 * தமிழ் ⇆ ஆங்கிலம்: 7,89,766 * தூய தமிழ் = 32,056 * வட்டாரச்சொல் = 6,477 * சித்த மருத்துவம் = 63,776 * தமிழ்–சமஸ்கிருதம் = 6,769 * சொற்பிறப்பியல் பேரகரமுதலி = 1,19,918 * மொத்தம் சுமார் 16 லட்சம் சொற்கள் * 🔗 [1](https://valluvarvallalarvattam.com/)
- 100+ அயோதிதாசர் நூல்கள் மின்னாக்கம்
* 🔗 [2](https://valluvarvallalarvattam.com/library/)
- 350 தமிழ் கலாச்சார ஓவியங்களை இலவசமாக வெளியிட்டுள்ளார்
* 🔗 [3](https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Iconography)
- தமிழ் தட்டச்சு பலகை, Unicode எழுத்துருக்கள், எழுத்து மாற்றிகள்
* 🔗 [4](https://valluvarvallalarvattam.com/tamilkeyboard/) * 🔗 [5](https://valluvarvallalarvattam.com/tamilfonts/)
- சங்க, காப்பியம், பக்தி, சிற்றிலக்கியங்கள் அனைத்தும் searchable வடிவில்
- திருப்புகழ் பாடல்களுக்கு இசை அமைத்து “இயலிசை” என்ற பெயரில் வெளியீடு
* 🔗 [6](https://valluvarvallalarvattam.com/iyalisai-part-1)...
- Glosbe dictionary தளத்திற்கு 4 லட்சம் சொற்கள் வழங்கியுள்ளார்
* 🔗 [7](https://glosbe.com/)
- தமிழ்–ஆங்கிலம்–நோர்வேஜிய மூன்று மொழி அகராதி
* 🔗 [8](https://ordbok.annai.no/)
- விளையாட்டு.காம்: தமிழ் கற்கும் செயலிகள், பட அகராதி, பெயர் தேடல்
* 🔗 [9](https://www.vilaiyaatu.com/)
- 133 மொழிகளில் திருக்குறள் – பல தேடல் வசதிகளுடன்
* 🔗 [10](https://www.vilaiyaatu.com/vilaiyaatu/thirukural/)
- தமிழக ஊர் பெயர்கள், சாதி அடையாளம் குறித்த ஆய்வு நூல்
* 🔗 [11](https://freetamilebooks.com/ebooks/tamilnadu_names_research/)
- சொல்லியம் தளம் – இணையத்தில் சொல் உருவாக்கம்
* 🔗 [12](https://www.kavadi.in/sollium/auth.html)
செயலிகள்
[தொகு]- சங்கச்சொற்புதிர்
- எதுசரி
- தட்டச்சம்
- தமிழ்க் கருவிகள்
- பகுபதம்
நூல்கள்
[தொகு]- பொருளாதார இட ஒதுக்கீடு – சரியா தவறா?
YouTube
[தொகு]- இங்கர்சால் YouTube சேனல் – 55,000+ சந்தாதாரர்கள்
* 🔗 [13](https://www.youtube.com/@IngersolSelvaraj)
இத்தொடர்ச்சி பங்களிப்புக்காக உதவியவர்கள்
[தொகு]அர்ச்சித், செல்வகுமார், சம்பந்தம், செந்தில், பாண்டியராஜன், ஜீவா மற்றும் விக்கித் தன்னார்வலர்கள்
---
வெளி இணைப்புகள்
[தொகு]- 🔗 [வள்ளுவர் வள்ளலார் வட்டம்](https://valluvarvallalarvattam.com)
- 🔗 [விளையாட்டு.காம்](https://www.vilaiyaatu.com)
- 🔗 [ordbok.annai.no](https://ordbok.annai.no)
- 🔗 [glosbe.com](https://glosbe.com)
- 🔗 [YouTube சேனல்](https://www.youtube.com/@ingersol)