பயனர்:கண்ணன்சுகந்தி

விக்கிமூலம் இலிருந்து
                                     கற்றல் கற்பித்தல் நிகழ்வு 
முன்னுரை:
    ‘பிறவித்திறமையை வளப்பதற்காகவே கல்வியறிவு பயன்படவேண்டும்’’ -பிளாட்டோ
       கல்வியின் தரம் உயர்ந்திட கற்பித்தலில் மாற்றமும் புதுமையும் தேவை.ஒரு சமுகத்தின் வளர்ச்சி என்பது பள்ளியின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது.கல்வியின் தரத்தை உயர்த்திட சமூகமாற்றங்களுடன் கூடிய தொழில் நுட்பங்களையும் கையாளவேண்டும்.கொராணா காலத்தில் கற்றல் கற்பித்தல் என்பது மிகவும் பாதுகாப்பானதாகவும்   விழிப்புணர்வுடனும் கையாளப்படவேண்டும். 
 ‘நல்ல கல்வி என்பது உடல் உள்ளம் ஆன்மாஆகியமூன்றையும் ஒருமித்து வளர்க்க வேண்டும்” .-மாகாத்மாகாந்தி.
       பள்ளி சமூகத்தின் ஓர் அங்கம்.பள்ளி சமூகத்தை சீரமைக்கும் ஒரு நுட்பமான சிற்பி.செதுக்கப்படும் சிற்பங்கள் யாவும் வருங்கால தலைவர்களை உருவாக்கும்.

ஆய்வின் நோக்கம்;

       மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்வி வழங்குவதில் இடர்பாடுகளை பற்றியும் அவற்றை களைவதற்கு உரிய தீர்வுகளையும் வழங்குவதாக இருக்கவேண்டும்.கொரோணாவால் உல்கமே ஸ்தம்பித்து நிற்கையில் கற்றலையும் கற்பித்தலையும் இக்காலகட்டத்தில் எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றியே இந்த ஆய்வுக்கட்டுரை.
       மாணவர்களை சமுதாயத்தில் சிறப்பாக பங்கேற்க தேவையான பயிற்சிகளை அளித்து நல்ல குடிமக்களாக உருவாக்கி சமூதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்வது கல்வியின் அடிப்படை நோக்கம். கற்றல் என்பது புத்தகத்தையும் தாண்டி வாழ்வியல் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்பதை இயற்கையெனும் பேரிடர் காலம் ஓர் படிப்பினையுடன் கற்றலை கொண்டுசெல்கிறது.

செயல்பாடுகள்: ”கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதல்ல அது சிந்திப்பதற்காக மூளையைப்பயிற்றுவிப்பது”- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பாதுகாப்பு, தன்திறமை,சுற்றுப்புறதூய்மை குறித்து மாணவர்களின் பெற்றோர்களுடன் கூட்டங்கள் நடத்தி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். சமூகபாதுகாப்புத்துறை : தமிழ்நாடு சுகாதாரதுறையுடன் இணைந்து பாதுகாப்புடன் கற்றலை குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை கலந்தாலோசித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:கண்ணன்சுகந்தி&oldid=1239498" இலிருந்து மீள்விக்கப்பட்டது