பயனர்:ஐயோன்

விக்கிமூலம் இல் இருந்து
(பயனர்:Ingersol.selvaraj இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இங்கர்சால் (Ingersol) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயா. தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் திவான் பகதூர் DBTRல் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார். இப்போது கடந்த 14 ஆண்டுகளாக நார்வேயில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் இயந்திர பொறியாளராக பணியாற்றி வருகிறார். பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ், காவேரி நீர், துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு, மீனவர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.

வள்ளுவர் வள்ளலார் வட்டம், மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை நடத்தி வருகிறார். தற்போது வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் மூலம் அகராதிகளை டிஜிட்டல் ஆக்கும் பணியில் முனைப்பாக இறங்கி கிட்டத்தட்ட 10 லட்சம் சொற்கள் தொகுத்துள்ளார் இது அரசிடம் இருப்பதை விட இரட்டிப்பு மடங்கு அதிகமான சொற்களாகும். அதேபோல் தமிழர்களின் வரலாற்றை தமிழர்கள் எளிதில் தேடி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வரலாற்று புத்தகங்களையும் இப்போது டிஜிட்டல் செய்து கொண்டிருக்கிறார்.

இயல் இசை நாடகம் என்ற தமிழர்களின் அடையாளத்தை மீட்டுருவாக்கம் முயற்சியில் முதல் கட்டமாக இசைவடிவம் கொடுக்கப்படாத 10 திருப்புகழ் பாடல்களை இப்போது இசையமைத்து வெளியிட உள்ளார். இதைப்போலவே திருவருட்பா நாலாயிர திவ்ய பிரபந்தம் சித்தர்கள் பாடல்கள் புறநானூறு கலிங்கத்துப்பரணி போன்ற அனைத்தையும் இசை வடிவில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அந்த இசை வடிவம் பழைய இசைவடிவில் மட்டுமல்லாமல் நவீன இசை வடிவான சொல்லிசை அதிரிசை போன்ற வடிவங்களில் வெளிவரும் என்று உறுதியளிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:ஐயோன்&oldid=1157633" இருந்து மீள்விக்கப்பட்டது