பயனர்:Mohamed ijazz
Welcome to my user page!
பெயர்:மொஹம்மத் இஜாஸ்
இடம்:துபாய்,ஐக்கிய அரபு அமீரகம்
பிறந்த இடம்:கண்டி உடத்தலவின்னை இலங்கை
பணிபுரியும் வேலை :மேற்பார்வையாளர்
விக்கிபீடியா பயனர்:Mohamed ijazz
- அஸ்ஸலாமு அலைக்கும்
என் பெயர் மொஹம்மத் இஜாஸ் . நான் விக்கிபீடியா இஸ்லாமிய வரலாறு தமிழ் பக்கங்களை தொகுக்கும் வேலையை ஆரம்பித்து உள்ளேன். ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும்.இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.இஸ்லாமிய வரலாற்று விக்கிபீடியா தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே.விக்கிபீடியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்று கட்டுரைகளைத் முழுமையாக தொகுக்கும் வேலையை ஆரம்பித்து உள்ளேன். இன்னும் ஏராளமான பக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்க/தொகுக்க வேண்டியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரபி மொழியிலிருந்து தூய்மையான தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களுக்குச் சமுதாயத்தில் பெரிய பஞ்சம் உள்ளது. அரபி மொழி அறிந்தவர்களுக்குத் தூய தமிழ் தெரியவில்லை; தமிழ் அறிஞர் களுக்கு அரபி மொழி தெரியவில்லை. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!
மொஹம்மத் இஜாஸ்
நன்றி
Thank you for visiting!