உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:MugunthanWiki93/tests

விக்கிமூலம் இலிருந்து

“நமக்கும்” போர்க்குணம் “மிகுதியும்” உண்டு. அதனால் தானே நமது புராணங்களில் கூட-கடவுளர்கள்கூடப் போராடியதாக எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கச் சிந்தனையாளர் சாக்ரடீஸ், கடவுள்களுக்கிடையில் நடந்த போர்களை மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடாது என்று சொன்ன அறிவுரையை எண்ணுக! உலகின் எந்த இனத்தையும்விட நமக்குப் போர்க்குணம் எந்த வகையிலும் குறைவில்லை. ஆனால், ஒரே ஒரு குறை! நமது போர்க்குணம் மனிதர்களுடன் போராடுவதிலேயே கழிகின்றது. மனித குலத்தின் பொதுப் பகையாகிய சாதி வேற்றுமைகள், வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபடுத்தப் படுவதில்லை. с

எம்பெருமானார்-என்றும் உடையவர் என்றும் போற்றப்பெற்ற ராமானுஜரின் முயற்சி சாதி வேற்றுமைகளை அகற்றுவதில் வெற்றி பெறவில்லை. அதுபோலவே அப்பர் அடிகள் நடத்திய போராட்டமும் வெற்றி பெறவில்லை. நம்முடைய பழக்கம் எதையும் வாழ்த்துவோம்! வழிபடு வோம்! ஆனால், பின்பற்ற மாட்டோம்! வழிபடுதல் என்ற சொல் வழியிலிருந்து தான் வழிபாடு என்ற சொல் பிறந்தது! இந்தத் திசையில் மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் பேசினார்கள். பார்வை யாளர்களும், மாநாட்டின் பிரதிநிதிகளும் இந்தப் புதிய உத்வேகம் தரக்கூடிய உரையைக் கேட்டனர்! மாநாடு புதிய நோக்கத்தைத் தந்தது! இதுதான் இலக்கு என்று, சரியான இலக்கை இனங்காட்டியது. மாநாட்டின் பாதிப்பு வேண்டிய அளவு இல்லாது போனாலும் ஓரளவு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:MugunthanWiki93/tests&oldid=1121722" இலிருந்து மீள்விக்கப்பட்டது