பயனர்:Sri varani R
என்னைப் பற்றி சில வரிகள்
என் பெயர் ஸ்ரீ வாரணி. நான் ஒரு பல்கலைக் கழகத்தில் வணிகம் படித்து வருகிறேன். என் பெற்றோர் தமிழ் நாட்டில் உள்ள ஈரோட்டில் வசித்து வருகின்றனர். எனக்கு உடன் பிறந்தவர்கள் எவரும் இலர். எனக்கு சித்திரம் தீட்டுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பல போட்டிகளிள் பங்குபெற்று சில பரிசுகள் வாங்கியுள்ளேன். எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கமும் உண்டு. நல்ல இசை கேட்பதில் ஆர்வம் உண்டு. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் வரை முறையாக கர்நாடக இசை கற்றேன். இவ்வுலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் என்னிடம் அன்பாகப் பழகுவதால் நான் வரம் பெற்றவள் போல மகிழ்கிறேன். நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதைக் காட்டிலும் நம்மிடம் இருப்பதை நினைத்து மகிழ்வதே சிறந்தது ஆகும். எனக்கு பிடித்த ஆசிரியரின் மீனாச்சி ஆவார். அவர் எனக்கு ஐந்தாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் கற்பித்தார். அவர் கோபம் கொள்ளாமல் நிதானமாக பாடத்தை கற்பிப்பார். நான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததற்கு என் பள்ளி ஆசிரியர்களே முக்கிய காரணம். எனக்கு பூப்பந்து விளையாடுதல் மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன். இவ்வகையான விளையாட்டுகளின் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். நாம் புத்துணர்ச்சி அடைவோம். எனக்கு நான்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் ஜனனி, ஷாம்பவி, ஷாலினி, பிரீத்தி. எனக்கு என் தாய் தந்தையரை மிகவும் பிடிக்கும். என் அப்பா விளையாட்டுப் பொருள்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். அவர் தான் செய்யும் வேலையை விரும்பி செய்கிறார். என் அம்மாவும் அந்தக் கடையிலேயே பணிபுரிகிறார். எனக்கு ஒரு கனவு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமான தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதுவே ஆகும். அதற்காக என்னால் இயன்ற சேவைகளைச் செய்வேன். வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்! நன்றி.
முயற்சி
இரும்பு போன்ற கால்கள்-அவை உடலைத் தாங்கும் தூண்கள் மலை போன்ற தோள்கள்-அவை சுமை தாங்கும் பலகைகள் வைரம் போன்ற கண்கள்-அவை வழிகாட்டும் விளக்குகள் வளைந்த மெலிவான காதுகள்-அவை ஆபத்தை உணர்த்தும் கருவிகள் பத்து விரல்கள்கொண்ட கைகள்-அவை சிற்பம் செதுக்கும் சிற்பிகள் மெலிவான சிவந்த பாதங்கள்-அவை நடக்க உதவும் வண்டிகள் ஒரே ஒரு மூளை மனிதனைச் சிந்திக்க வைக்கும் மூளை-இவை அனைத்தையும் பயன்படுத்து தோழா! வெற்றி உன்னைத் தொடரும்!