பயனர் பேச்சு:Shanmugamp7/mainpage
தலைப்பைச் சேர்Appearance
சில கருத்துகள்
[தொகு]- இப்பக்கத்தில் கூட சில மாறுதல்கள் தேவைப்படுமென்று நினைக்கிறேன். பழந்தமிழர் இலக்கியம் தலைப்பிலும், சங்க இலக்கியம் இரண்டிலுமே, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்டவை வருகின்றன். பழந்தமிழ் இலக்கியங்கள் பிரிவிலிருந்து நீக்காமல் இருக்க ஏதேனும் காரணம் உண்டா?
- சமய இலக்கியங்களில் சிலவற்றை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, பலவற்றை சேர்க்கலாம்
- விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று சில மூலங்களையும் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்
- இலக்கண இலக்கியம் மட்டுமே உள்ளது. பாடல்கள், கவிதைத் தொகுப்பு போன்றவற்றையும் சேர்க்கலாம்
- இன்னும் சில கருத்துகள் உள்ளன, விரைவில அவற்றையும் சேர்த்து விடுகிறேன் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:51, 5 ஜூன் 2012 (UTC)
- இப்போதைக்கு வடிவ மாதிரியை மட்டுமே சோதனை செய்துள்ளேன் தினேஷ் .. உள்ளடக்கங்களை இனிதான் முடிவு செய்ய வேண்டும். மேலும் இப்போதுள்ளது போல கட்டுரைகளை இடுவதை விட தமிழ் விக்கிபீடியாவை போல வார்ப்புரு மூலம் இடலாம் என எண்ணுகிறேன். அப்போதுதான் திருத்த எளிதாக இருக்கும். உங்களுக்கு நேரமிருக்குமனால் ஒன்று செய்யுங்களேன். என்ன தலைப்பில் என்னென்ன நூல்கள் வேண்டும் என்பதை ஒரு பட்டியலாக ஒரு பக்கத்தில் உருவாக்கி விடுங்கள்.. பிறகு வார்ப்புருக்களாக மாற்றிக் கொள்ளலாம்..
- மூலங்களை காட்சி படுத்தலாம் (விக்கிபீடியாவில் இன்றைய சிறப்புப் படம் வருவதைப் போல நெடுவரிசைகள் இல்லாமல்)--Shanmugamp7 (பேச்சு) 08:20, 5 ஜூன் 2012 (UTC)
- தலைப்பில் நூல்களை பிரித்துவிடுவது இலகுவான பணியே. ஆனால், தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அளவிற்கு போதிய அளவு அறிவு இன்னும் வளரவில்லை எனக்கு. முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப் போகும் இதனை, தமிழ் இலக்கியத்தில் கைதேர்ந்த அல்லது சிறந்து விளங்கும் யாராவது செய்தால் அது சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. யாரும் முயற்சி எடுக்காதபட்சத்தில் நானே செய்கிறேன், ஆனால் நான் போதிய தகவல்களை சேர்க்க அதிக காலம் எடுக்கும். வார்ப்புருவாக மாற்றுவதில் எனக்கும் விருப்பமே! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:05, 5 ஜூன் 2012 (UTC)
- பயனர்:shanmugamp7/முதற்பக்க கட்டுரைகள் இப்பக்கத்தில் செங்கைப்பொதுவன் மற்றும் பவுல் இருவரிடமும் கட்டுரைகளை தேர்வு செய்ய சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம் தினேஷ்..பகுப்பாக்கம் செய்தால் பகுப்புகளைக் கூட இணைக்கலாம் :). பொறுமையாக செய்ய வேண்டிய பணியே தினேஷ், அவசரம் ஒன்றுமில்லை:).--Shanmugamp7 (பேச்சு) 10:44, 5 ஜூன் 2012 (UTC) ஆதரவு-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:04, 5 ஜூன் 2012 (UTC)