பழனித் தெய்வப்புகழ்
Appearance
தெய்வப்புகழ் (பழனாபுரி)
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா ... தனதான
சுரவா தமகோ தரநோய் அணியாய்
வரவே அதனால் ... நலியாது
இலைநீ ருடனே மதிநா கமுமே
அணி நாயகரே ... அருள்பாலா
முருகா குமரா குகனே குருவே
மறையே முதலே ... எனவோத
கொடுநோய் கெடவே கலிநோய் விடவே
அயிலே விடுவாய் ... அருள்வாயே
அரசே எழவே திருநீ றுடனே
தமிழே அமுதா ... யருள்வோனே
திருமாதுடனே வரும் மாதவனே
திருமால் மருகா ... அழகோனே
கணநா தனுமே வனமே வரவே
மகிழ்வாய் மணமே ... புரிவோனே
திருவே ரகமே திகழ்வே லவனே
பழனா புரிவாழ் ... பெருமாளே