பழமுதிர்சோலைத் தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

பழமுதிர்ச்சோலை ( தெய்வப்புகழ்)

நாத ஒலியோடு  வீர நடைபோடும்

வேழ முகவோனின்  ...   இளையோனே

ஆதி மகமாயி தேவி திரிசூலி

  காளி உமையாளின் ...  உடன் ஆடும்

சோதி வடிவான ஆதி  முதல்நாதர்  

ஓம்ந மசிவாயர் ...   அருள்பாலா

நானும் உனைநாடி நாளும் புகழோத

ஞான உபதேசம் ...   அருள்வாயே

வீர உணர்வோடு தோகை மிகவீசும்     

      நீல நிறமான ...  மயிலேறி

சூரர்குலம் மாள தேவர்குலம் வாழ

      ஞான அயிலேவும் ... குமரேசா

மேள இசையோடு வேழமகள் பாட   

  வேடமகள் ஆட.  ...  மகிழ்வோனே

மேனி அழகான மாமன் உடன் வாழும்

           சோலை மலை ஞான ... முருகோனே