பாட்டுப் பாடுவோம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பாட்டுப் பாடுவோம்.pdf

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
CC Zero badge.svg Blank.jpg CC-logo.svg
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

PATTU-P_PADUVOM (Tamil Nursery Rhymes)

Author  :Kulanthai Kavingar AL. VALLIAPPA

Illustrator  : KALA

Publisher  : KULANTHAI PUTHAKA NILAYAM

        AL-183, 11th Main Road, Anna Nagar
        Chennai - 600 040

Printer  : RAVI RAJA OFFSET

        2, S.P.S. 3rd Street
        Royapettah, Chennai - 600 014
        Ph: 2835 1295

First Edition : APRIL 1998

Second Edition: MARCH 2001

Third Edition : AUGUST 2007

Price  : Rs. 20/-

(c) Author

வெளியிட்டோர்:

குழந்தைப் புத்தக நிலையம்
AL- 183, 11வது மெயின் ரோடு,
அண்ணா நகர், சென்னை - 600 040


விற்பனை உரிமை:
பாரி நிலையம்

90, பிராட்வே, சென்னை - 108

வண்டி வருகுது


கடகடா கடகடா வண்டி வருகுது

காளைமாடு இரண்டுபூட்டி வண்டி வருகுது.


டக்டக் டக்டக் வண்டி வருகுது

தாவித்தாவி ஓடும்குதிரை வண்டிவருகுது


ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது

சீனுஎறி ஓட்டும்சைக்கிள் வண்டி வருகுது.


பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது

பாய்ந்துவேக மாகமோட்டார் வண்டி வருகுது.


குப்குப் குப்குப் வண்டி வருகுது

கும்பகோண மிருந்துரயில் வண்டி வருகுது


நாய்க்குட்டி


தோ. தோ...நாய்க்குட்டி.

துள்ளி வாவா நாய்க்குட்டி.


உன்னைத் தானே நாய்க்குட்டி.

ஒடி வாவா நாய்க்குட்டி.


கோபம் ஏனோ நாய்க்குட்டி ?

குதித்து வாவா நாய்க்குட்டி


* * *

கழுத்தில் மணியைக் கட்டுவேன்;

கறியும் சோறும் போடுவேன்.


இரவில் இங்கே தங்கிடு.

எங்கள் வீட்டைக் காத்திடு !

துட்டுத் தந்தால் லட்டு


வெங்கு, வெங்கு, வெங்கு

வெங்கு ஊதினான் சங்கு.


நுங்கு, நுங்கு, நுங்கு

நுங்கில் எனக்குப் பங்கு.


வள்ளி, வள்ளி, வள்ளி

வள்ளி கொலுசு வெள்ளி.


பள்ளி, பள்ளி, பள்ளி

பள்ளி செல்வோம் துள்ளி.


பட்டு, பட்டு, பட்டு

பட்டு வாயில் பிட்டு.


துட்டு, துட்டு, துட்டு

துட்டுத் தந்தால் லட்டு. 
எங்களுடைய அப்பா


எங்களுடைய அப்பா - அவர்

என்றும் அணிவார் ஜிப்பா.


எங்க்ளுடைய அம்மா - அவள்

எதுவும் தருவாள் சும்மா.


எங்களுடைய தங்கை - அவள்

இனிய பெயரே மங்கை


எங்களுடைய தம்பி - அவன்

என்றும் தங்கக் கம்பி.


எங்களுடைய பாட்டி - அவள்

எவர்க்கும் தருவாள் பேட்டி ! 

நத்தையம்மா

நத்தை யம்மா, நத்தை யம்மா,

எங்கே போகிறாய் ?


அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்

கொண்டு போகிறேன்.


எத்தனைநாள் ஆகும் அத்தை

வீடு செல்லவே ?


பத்தே நாள்தான்; வேணு மானால்

பார்த்துக் கொண்டிரு.

மாம்பழம்

 மாம்பழமாம் மாம்பழம்.

மல்கோவா மாம்பழம்.


சேலத்து மாம்பழம்.

தித்திக்கும் மாம்பழம்.


அழகான மாம்பழம்.

அல்வாபோல் மாம்பழம்.


தங்கநிற மாம்பழம்.

உங்களுக்கு வேண்டுமா?


இங்குஓடி வாருங்கள்;

பங்குபோட்டுத் தின்னலாம். 
அருமை நேரு


அருமை நேரு பிறந்தது

அலகா பாத்து நகரிலே.


இளைஞர் நேரு படித்தது

இங்கி லாந்து நாட்டிலே.


தீரர் நேரு வாழ்ந்தது

தில்லி நகரம் தன்னிலே.


இன்று நேரு வாழ்வது

எங்கள் பிஞ்சு நெஞ்சிலே!
பாப்பா அழாதே !


பாப்பா, பாப்பா, அழாதே !

பலுான் தாரேன்; அழாதே !


கண்ணே பாப்பா, அழாதே !

காசு தாரேன்; அழாதே !


பொன்னே பாப்பா, அழாதே !

பொம்மை தாரேன்; அழாதே !


முத்துப் பாப்பா, அழாதே !

மிட்டாய் தாரேன் அழாதே !


என்ன வேண்டும் ? சொல் பாப்பா.

எல்லாம் வேண்டுமா ? சொல் பாப்பா.


சரி சரி பாப்பா, தருகின்றேன்.

சிரி சிரி கொஞ்சம் சிரி, பாப்பா.
அணில்அணிலே அணிலே ஒடிவா.

அழகு அணிலே ஒடிவா.


கொய்யா மரம் ஏறிவா.

குண்டுப் பழம் கொண்டுவா.


பாதிப் பழம் உன்னிடம்;

பாதிப் பழம் என்னிடம்;


கூடிக் கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
பத்துப் பைசா பலுான்பத்துப் பைசா விலையிலே

பலுான் ஒன்று வாங்கினேன்.


பலுான் ஒன்று வாங்கினேன்,

பையப் பைய ஊதினேன்.


பையப் பைய ஊதவே,

பந்து போல ஆனது.


பந்து போல ஆனபின்

பலமாய் நானும் ஊதினேன்.


பலமாய் ஊத ஊதவே,

பானை போல ஆனது.


பானை போல ஆனதைக்

கான ஒடி வாருங்கள்.


விரைவில் வந்தால் பார்க்கலாம் அல்லது.

வெடிக்கும் சத்தம் கேட்கலாம்! 
மரம் ஏறலாம்


தென்னைமரத்தில் ஏறலாம்.

தேங்காயைப் பறிக்கலாம்.


மாமரத்தில் ஏறலாம்.

மாங்காயைப் பறிக்கலாம்.


புளியமரத்தில் ஏறலாம்.

புளியங்காயைப் பறிக்கலாம்.


நெல்லிமரத்தில் ஏறலாம்.

நெல்லிக்காயைப் பறிக்கலாம்.


வாழைமரத்தில் ஏறினால்,

வழுக்கிவழுக்கி விழுகலாம் ! 
பார் பார் !


தரையின் மேலே

தொட்டி பார்.


தொட்டி மேலே

செடியைப் பார்.


செடியின் மேலே

பூவைப் பார்.


பூவின் மேலே

வண்டைப் பார்.


வண்டின் மேலே

பளபளக்கும்


வர்ணம் உண்டு;

அதையும் பார் !
பாட்டுப் பாடுவோம்.pdf

"https://ta.wikisource.org/w/index.php?title=பாட்டுப்_பாடுவோம்&oldid=1407117" இருந்து மீள்விக்கப்பட்டது