பாம்பாட்டிச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
- பக்கம் 179 - 197
பாம்பாட்டிச்சித்தர்
ஆடுபாம்பே
[தொகு]1
[தொகு]தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடுபாம்பே சிவன்
- சீர்பாதங்கண்டு தெளிந்து ஆடுபாம்பே
ஆடுபாம்பே தெளிந்து ஆடுபாம்பே சிவன்
- அடியினைக் கண்டோமென்று ஆடுபாம்பே (1)
2
[தொகு]நீடுபதம் நமக்கென் றுஞ்சொந்தம் என்றே
- நித்தியம்என் றேபெரிய முத்தியென்றே
பாடுபடும் போதும் ஆதிபாதம் நினைந்தே
- பன்னிப்பன்னிப்பரவி நின்று ஆடுபாம்பே (2)
3
[தொகு]பொன்னில் ஒளி போலவெங்கும் பூரணமதாய்
- பூவின் மணம் போலத் தங்கும் பொற்புடைய தாய்
மன்னும் பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
- வள்ளலடி வணங்கி நின்று ஆடுபாம்பே (3)
4
[தொகு]எள்ளில் எண்ணெய் போல வுயிர் எங்கும் நிறைந்த
- ஈசன் பத வாசமலர் எண்ணியெண்ணியே
உள்ளபடி அன்புபத்தி ஓங்கி நிற்கவே
- ஒடுங்கி யடங்கித் தெளிந்து ஆடுபாம்பே (4)
5
[தொகு]அண்டபிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை
- அகலாம லேநினைத்தே அன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி மேத்தியே
- ஏகமன மாகநாடி ஆடுபாம்பே (5)
6
[தொகு]சோதிமயமான பரிசு த்தவத்துவைத்
- தொழுதழு தலற்றித் தொந் தோம்தோம் எனவே
நீதி தவறா வழியில் நின்று நிலையாய்
- நினைந்து நினைந்துருகி ஆடுபாம்பே (6)
7
[தொகு]அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
- அந்தமாயும் ஒளியாயும் ஆகமமாயும்
திருவாயும் குருவாயும் சீவனாயும்
- செறிந்தவத் துவைப் போற்றி ஆடுபாம்பே (7)
8
[தொகு]சுட்டிக் காட்ட ஒண்ணாதபாழ்ச் சூனியம் தன்னை
- சூட்சமதியால் அறிந்து தோஷம் அறவே
எட்டிப்பிடித்தோ மென்றானந்த மாகப்பை
- எடுத்து விரித்து நின்று ஆடுபாம்பே (8)
9
[தொகு]எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
- இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆதியும் நின்ற
- ஆனந்த வெள்ளங்கண்டு ஆடுபாம்பே (9)
குரு வணக்கம்
[தொகு]10
[தொகு]காற்று உடன்பொருள் ஆவி தத்தமாகவே
- தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப்
- புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே (10)
11
[தொகு]பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
- புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
- மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே (11)
12
[தொகு]வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த
- மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
- பூரண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே (12)
13
[தொகு]உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
- உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ள மனத்தன்னைத் தள்ளிக் கண்டுகொண்டு அன்பாய்க்
- களித்துக் களித்து நின்று ஆடு பாம்பே (13)
14
[தொகு]அங்கையிற் கண்ணாடிபோல ஆகி வத்துவை
- அறிவிக்கும் எங்கள் உயிரான குருவைச்
சங்கையறச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
- தமனியப் படம் எடுத்து ஆடு பாம்பே (14)
15
[தொகு]காயம் நிலைஅழிகையைக் கண்டு கொண்டு பின்
- கற்பு நிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்
தூயநிலை கண்ட பரிசுத்தக் குருவின்
- துணையடி தொழுது நின்று ஆடு பாம்பே (15)
16
[தொகு]கூடுவிட்டுக் கூடு பாயும் கொள்கை யுடைய
- குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர்
வீடு பெறும் வகையை மேன்மேலுங் காட்டும்
- மெய்க்குருவைப் பணிந்து நின்று ஆடு பாம்பே (16)
17
[தொகு]அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்
- அடக்கிய குளிகையோடு ஆடி விரைவாய்
வட்டமிட்டு வலம் வரும் வல்லகுருவின்
- மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே (17)
18
[தொகு]கற்ப காலம் கடந்தாதி கர்த்தா வோடும்
- கடமழி யாது வாழுங் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
- பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே (18)
19
[தொகு]வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்
- வல்லுடம்புக் கொரு குறை வாய்த்திடாது
மெச்சுகட முள்ள எங்கள் வேத குருவின்
- மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே (19)
பாம்பினது சிறப்பு
[தொகு]20
[தொகு]நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே
- நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடி புகும் பைகொள் பாம்பே
- பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே (20)
21
[தொகு]வளைபுகும் போதே தலை வாங்கும் பாம்பே
- மண்டல மிட்டுடல் வளை வண்ணப் பாம்பே
தலைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே
- தலையெடுத்தே நீ விளையாடு பாம்பே (21)
22
[தொகு]குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
- கூறுந்திரு மாலுக்குக் குடையுமானாய்
கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
- கரவாமல் உளங்களித்து ஆடுபாம்பே (22)
23
[தொகு]மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்
- மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப்பாயானாய்
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
- கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடுபாம்பே (23)
24
[தொகு]சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய்
- சங்கரனுக்கு ஆபரணந் தானுமாகினாய்
மந்திரத்துக்குக் கடங்கினாய் மண்டலமிட்டாய்
- வளைந்து வளைந்து நின்று ஆடுபாம்பே (24)
சித்தர் வல்லபம்
[தொகு]25
[தொகு]எட்டு நாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்
- இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்
- கடு விஷந் தன்னைக் கக்கி ஆடு பாம்பே (25)
26
[தொகு]ஆதிசேடன் ஆயினுமெம் மங்கையினாலே
- ஆட்டி விடுவோமெங்கள் ஆக்கினைக்குள்ளே
நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்
- நின்ற நிலை தவறாமல் ஆடுபாம்பே (26)
27
[தொகு]தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்குவோம்
- துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்
ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும்ஆகச் செய்குவோம்
- ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே (27)
28
[தொகு]எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்
- ஏழு கடலையுங் குடித்து ஏப்பமிடுவோம்
மட்டுப் படா மணலையும் மதித்து விடுவோம்
- மகாராசன் முன்பு நீ நின்று ஆடுபாம்பே (28)
29
[தொகு]மண்டலமுற்று மெங்கையால் மறைத்து விடுவோம்
- வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்
தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம்
- தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடு பாம்பே (29)
30
[தொகு]மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
- முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்
தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
- தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே (30)
31
[தொகு]செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்
- செங்கதிரைத் தன்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
- எங்கள் வல்ல பங்கண்டு நீ ஆடுபாம்பே (31)
32
[தொகு]வேதன் செய்த சிருட்டிகள் போல் வேறு செய்குவோம்
- வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
- நாங்கள் செய்கை யாம்இதுவென்று ஆடுபாம்பே (32)
33
[தொகு]அறுபத்து நாலு கலை யாவும் அறிந்தோம்
- அதற்குமேல் ஒருகலையான தறிந்தோம்
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
- மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே (33)
34
[தொகு]சீறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்
- சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
- விளையாடச் செய்குவோமென்றஃ ஆடுபாம்பே (34)
35
[தொகு]வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி
- மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே
தேசுலவு தக்கனைத்தன் திக்கினில் சேர்த்துச்
- செய்யபது மனைக்கொள்ளும் சித்தனாரே (35)
36
[தொகு]ஆனந்தனை யொருபக்கமாக நிறுத்தி
- அதன் பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக்
கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங்
- கடுஞ்சங்க பாலனைத்தான் சித்தனாரே (36)
37
[தொகு]அட்டதிக்குஞ் சக்கரங்களாகக் கீறி
- அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத்
திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும்
- சித்தந்தடு மாறாதீர் சித்தனாரே (37)
38
[தொகு]அட்டதிக்குஞ் சக்கரங்கள் அமைத்து விட்டோம்
- அவ்வவற்றில் சக்கரங்கள் அமைத்து விட்டோம்
எட்டுநாகம் இருக்கின்ற இடத்தில் விட்டோம்
- இனியென்ன செய்வம் சொல்லும் சித்தனாரே (38)
39
[தொகு]நடுவாக ஆதிசேடன் தன்னை நாட்டும்
- நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
கடுவிடங் கக்க வேயக் கட்செவிகளைக்
- கையிலெடுத் தாடுங்கள் சித்தனாரே (39)
பொருளாசை விலக்கம்
[தொகு]40
[தொகு]நாடுநகர் வீடுமாடு நற்பொருள் எல்லாம்
- நடுவன்வ ரும்பொழுது நாடி வருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ
- கூத்தன் பதங் குறித்துநின்று ஆடுபாம்பே (40)
41
[தொகு]யானை சேனை தேர்பரி யாவும் அணியாய்
- யமன்வரும் போது துணை யாமோ அறிவாய்
ஞானஞ்சற்றும் இல்லாத நாய்கட் குப்புத்தி
- நாடிவரும்படி நீ நின்று ஆடுபாம்பே (41)
42
[தொகு]மாணிக்கமா மணிமுடி வாகு வலயம்
- மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்
ஆணிப்பொன்முத் தாரம் அப்பொன் அந்தக் கடகம்
- அழிவான பொருளென நின்று ஆடுபாம்பே (42)
43
[தொகு]மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
- மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை
கூடவாராவென்று அந்தக் கொள்கை அறிந்தோர்
- குலவாமல் வெறுப்பாரென்று ஆடுபாம்பே (43)
44
[தொகு]மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
- மறலிதான் வருகையில் வாரிச்செல்வரோ
அலையாமல் அகத்தினை அத்தன்பால் வைத்தோர்
- அழியார்என் றேநீ துணிந்து ஆடுபாம்பே
45
[தொகு]பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும்
- பாழ்ச்சுடு காடதிலே பயனைப் பெறுமோ
மஞ்சள்மணம் போய்ச் சுடுநாறு மணங்கள்
- வருமென்றஃ தெளிந்து நின்று ஆடுபாம்பே
46
[தொகு]முக்கனியுஞ் சர்க்கரையும் மோதகங்களும்
- முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
- மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே
47
[தொகு]வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும்
- வண்கவிதை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும்
திண்ணமுடன் யம்புரஞ் செல்லுங் காலத்தில்
- சேரவர மாட்டாயென்று ஆடுபாம்பே
48
[தொகு]மக்கள் பெண்டிர் சுற்றமருமக்கள் மற்றவர்
- மாளும்போதுகூட அவர் மாள்வதில்லாயே
தக்கவுலகனைத்தையும் தந்த கர்த்தனைத் :
- தாவித்தாவித் துதித்துநின்று ஆடுபாம்பே
49
[தொகு]கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல்
- காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
- மெய்யன்பதம் நாடுவாரென்று ஆடுபாம்பே
50
[தொகு]பெண்ணாசை விலக்கம்
[தொகு]வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை
- விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்
- உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே
51
[தொகு]செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
- சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டு கட்டெ றுமையேறுங் கூற்றுப் பருந்தைக்
- கொன்று தின்றுவிட்டோம் நாம் என்று ஆடு பாம்பே
52
[தொகு]வட்டமுலையென்று மிக வற்றுந்தோலை
- மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்
கெட்ட நாற்ற முள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார்
- கெடுவர் என்றே நீர்துணிந்து ஆடுபாம்பே
53
[தொகு]மலஞ்சொரி கண்ணைவடி வாளுக்கொப்பாக
- வருணித்துச் சொல்வார் மதிவன்மை இல்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
- கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே
54
[தொகு]சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்
- சிப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்கு நெக்கு உருகிப்பெண்ணை நேஞ்சில் நினைப்பார்
- நிமலனை நினையார் என்று ஆடுபாம்பே
55
[தொகு]நாறிவரும் எச்சில்தனை நல்லமுதென்றும்
- நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழ்என்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக்கூகை மாந்தர்கள்
- கோன் நிலையை அறியார் என்று ஆடுபாம்பே
56
[தொகு]மயில்என்றும் குயில்என்றும் மாணிக்கம் என்றும்
- மானேயென்றும் தேனேயென்றும் வான் அமுதென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவளென்றும்
- ஓதாமற் கடிந்துவிட்டு ஆடுபாம்பே
57
[தொகு]மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக்கம் என்றும்
- மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகையென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ் சீனிக் கற்கண்டு என்றும்
- கழறாமல் கடிந்தோம் என்று ஆடுபாம்பே
58
[தொகு]பூவையென்றும் பாவையென்றும் பொன்னேயென்றும்
- பூந்திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகிலம் என்றும்
- கூறாமல் து றந்தோம்நாம் என்று ஆடுபாம்பே
59
[தொகு]மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
- மல்கும்புழுக் கூட்டின் மேல் வண்ணத் தோல் என்றும்
சலக்குழிக்குள்ளே நாற்றஞ்சார்ந்த சேறென்றும்
- தான் அறிந்து தள்ளினோம் என்று ஆடுபாம்பே
60
[தொகு]சரீரத்தின் குணம்
[தொகு]ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
- உதிர்ப்பு னலினிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் அவர் பண்ணும் பாண்டம்
- வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே
61
[தொகு]இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண
- ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
- அரைக காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே
62
[தொகு]பரியாசம் போலவே கடித்த பாம்பு
- பலபேர் அறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
- பையோடே கழன்றதென்று ஆடுபாம்பே
63
[தொகு]சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமும்
- சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்
நாயும் நரியும் பெரிய பேயுங்கழுகும்
- நமதென்றே தின்றிடும் என்று ஆடுபாம்பே
64
[தொகு]நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல
- நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
- பற்றவேநீ பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே
65
[தொகு]நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
- நாளுங் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பலந்தி யாடிக் கொண்டதால்
- கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே
66
[தொகு]காய்த்த மரம் அதுமிக்க கல்லடி படும்
- கன்ம வினை கொண்ட காயம் கண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
- வந்துத் திருவடி தொழுது ஆடுபாம்பே
67
[தொகு]பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி
- பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண்டாச்சே
ஈசன் நிலை அறியார்க்கு இந்தத் துருத்தி
- எரிமண்ணிற்கு இரையாம் என்று ஆடுபாம்பே
68
[தொகு]மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து
- வளமான சீவன் என்னுஞ் சூத்திரம் மாட்டித்
திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே
- தேகம் விழும் என்று தெளிந்து ஆடுபாம்பே
69
[தொகு]தசநாடி தசவாயு சத்த தாது
- சார்ந்தமரக் கப்பல் அது தத்திவிழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
- எந்நாளும் ஓட்டத் துணிந்து ஆடுபாம்பே
70
[தொகு]அகப்பற்று நீக்கல்
[தொகு]தாமரையின் இலையிலே தண்ணீர் தங்காத
- தன்மைபோல சகத்தாசை தள்ளி விட்டெங்கும்
தூமணியாய் விளங்கிய சோதி பதத்தைத்
- தொழுது தொழுது தொழுது ஆடுபாம்பே
71
[தொகு]கள்ளங்கொலை காமமாதி கண்டித்தவெல்லாம்
- கட்டறுத்து விட்டு ஞானக் கண்ணைத் திறந்து
தெள்ளிதான வெட்டவெளி சிற் சொரூபத்தைத்
- தேர்ந்து பார்த்துச் சிந்தை தெளிந்து ஆடுபாம்பே
72
[தொகு]சொல்லும்புளி யம் பழத்தின் தோடு போலவே
- சுற்றத்திருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று
நில்லுமனமே நீபர நின்மலத்திலே
- நின்றுணைதான் வெறும் பாழென்று ஆடுபாம்பே
73
[தொகு]சேற்றில் திரி பிள்ளைப் பூச்சி சேற்றை நீக்கல்போல்
- தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்டபின்
சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே
- தானடக்க வேணுமென்று ஆடு பாம்பே
74
[தொகு]எண்ணெய்க்குந் தண்ணீர்க்குந் தொந்தம் இல்லா வாறுபோல்
- எப்போதும் இப்புவியில் எய்த வேண்டும்
கண்ணுக்குக் கண்ணானவொளி கண்டு கொள்ளவே
- கட்டறுத்து வாழ்ந்திட நின்று ஆடுபாம்பே
75
[தொகு]கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள்
- கண்களுக்கு சுத்தமான காட்சிபோலவே
சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச்
- சீர்பாதங் காணத் தெளிந்து ஆடுபாமனே
76
[தொகு]கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்
- கூர்கொள்யுக்தி அங்குசத்தால் கொன்று விட்டோங்
தீபமென்னுஞ் சிற் சொரூபச் செய்ய பொருளைச்
- சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடு பாம்பே
77
[தொகு]நித்யமென்னு மலையில் நின்று கொண்டோம் யாம்
- நினைத்தபடியே முடித்து நின்மல மானோம்
சத்தியமாய் எங்கள் கடந்தான் அழியாதே
- சந்ததமும் வாழ்வோம் என்று ஆடுபாம்பே
78
[தொகு]மனமென்னும் குதிரையை வாகனமாக்கி
- மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச்
சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித்
- தெளிவிடம் சாரிவிட்டு ஆடுபாம்பே
79
[தொகு]ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே
- ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசையெனுந் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்திக்
- காலாகாலங் கடந்தோம் என்று ஆடுபாம்பே
80
[தொகு]காலன் எனுங் கொடிதான கடும்ப கையை நாம்
- கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்
தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்
- தற்பரங் கண்டோம் என்று ஆடுபாம்பே
81
[தொகு]தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து
- திகையாமல் சிற்சொரூப தெரிசனைக்கண்டு
வானிற் பறந் திடச்சூத வான் மணி தீர் ந்து
- வாயிற் போட்டேக நீ நின்று ஆடுபாம்பே
82
[தொகு]தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியுங் கண்டேன்
- சுத்த வெளிக்குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன்
தாக்கிய சிரசின் மேல் தைத்த பாதம்
- சற்குருவின் பாதம் என்று ஆடுபாம்பே
83
[தொகு]ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே
- அரசடிப் பொந்தினிலே புகுந்து கொண்டாய்
வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து
- வாங்கியே தூங்கிநின்று ஆடுபாம்பே
84
[தொகு]நாலு தெருவினிலே நாலு கம்பம்
- நடுத்தெருவினிலேயோர் பொன்னுக் கம்பம்
போலும் விளங்குபொன்னுக் கம்பத்தினுக்கே
- பூமாலை சூடியேநின்று ஆடுபாம்பே
85
[தொகு]ஆழிபெயர்ந்தாலும் மேருமட்டே அலையும்
- அடியோடு பெயர்ந்தாலும் அன்றிக்கால
ஊழிபெயர்ந்தாலும் மதி உண்மைப் படிக்கே
- உறுதி பெயராது நின்று ஆடுபாம்பே
86
[தொகு]வாயுவினை இரையாக வாங்கி உண்டே
- வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில்
- திகைப்புறச் சேர்ந்துநின்று ஆடு பாம்பே
87
[தொகு]மாசில்கதி வளையிலே மண்டலம் இட்டே
- மதியான பெரும்பட மடலை விரித்தே
ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை
- அடுத்தடுத்தே துதித்து ஆடுபாம்பே
88
[தொகு]காடுமலை ந்திபதி காசி முதலாய்க்
- கால்கடுக்க ஓடிற்பலன் காண லாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
- வேதாந்தத் துறையில் நின்று ஆடுபாம்பே
89
[தொகு]எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி
- எய்துவது தொல்லுலகில் இல்லையெனவே
கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக்
- கண்டு தொழுதே களித்து ஆடுபாம்பே
90
[தொகு]சூரியனைக் கண்டபனி தூர ஓடல் போல்
- சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில்
ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன்
- அகலாமல் பற்றித் தொடர்ந்து ஆடுபாம்பே
91
[தொகு]காந்தம்வலி இரும்பு போல் காசில் மனத்தைக்
- காட்சியான வத்துவுடன் கலக்கச் சேர்த்துக்
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச்
- சலியாமல் தொடர்ந்து நின்று ஆடுபாம்பே
92
[தொகு]உளியிட்ட கற்சிலையில் உண்டோ உண்ணர்ச்சி
- உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி
புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்
- போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே
93
[தொகு]திரளான போரில் ஊசி தேடல் போல்முத்தி
- சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு ஐயர் செயலால்
- ஆனந்தம் கண்டோம் என்று ஆடுபாம்பே
94
[தொகு]ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்
- எண்திசை திரிந்துங் கதி எய்தல் இலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
- நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே
95
[தொகு]தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
- தன்னையறியாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னை யொரு கடவுளைப் பேண நினையா
- பேரொளியைப் பேணுவார் என்று ஆடுபாம்பே
96
[தொகு]பாலிற்சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியைப்
- பற்றுப்பொன் பற்றவைத்த பான்மைபோலே
காலிற்சுழு முனைநின்று கண்டு கொண்டு
- களித்துக் களித்துநின்று ஆடுபாம்பே
97
[தொகு]தேக்கெடுத்தே ஓடும்வானத் தேனை உண்டபின்
- தேகபந்தம் கொண்டனம் இத்தேச வாழ்வினை
ஒக்காளமென்று எண்ணிமிகு ஒகையுடன் நீ
- உள்ளம் தெளிந்து நின்று ஆடுபாம்பே
98
[தொகு]சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
- தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்விதமானவான வேறு நூல்களும்
- வீணான நூல்களே என்று ஆடுபாம்பே
99
[தொகு]சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
- சசத்தோர்க்கே அல்லாது சற் சாதுக் களுக்கோ
சிமயத்தி லேறியபேர் சித்தம் மாறுமோ
- சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே
100
[தொகு]பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ
- பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
- அடையலாம் என்று துணிந்து ஆடுபாம்பே
101
[தொகு]மூலவேர் அறிந்து கொண்டால் மூன்று உலகமும்
- முன்பாகவே கண்டு நித்யமுத்தி சேரலாம்
சாலவேர் அறிந்ததாலே தான் பயன் உண்டோ
- சகத்தைப்பொய் யென்று தெளிந்து ஆடுபாம்பே
102
[தொகு]சகத்தனாதி யென்றிடாது தான் அனாதியார்
- சமைந்ததென்று உரைப்பார்கள் சத்தை அறியார்
மகத்துவ நிலைகற்பவன்மை யல்லாது
- மற்றும் வன்மை இல்லையே என்று ஆடுபாம்பே
103
[தொகு]ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
- அண்டம் எல்லாம் நிறைந்திடும் அற்புதச் சித்தன்
காயமில்லாது ஓங்கிவளர் காரணச் சித்தன்
- கண்ணுள் ஒளி யாயினான் என்று ஆடுபாம்பே
104
[தொகு]நாற்பத்து முக்கோண நிலை நாப்பணதாக
- நாடும் அக்கரச் சொரூப நாயகன் தனை
மேற்படுத்திக் கொண்டால் அந்த மேலுலகெலாம்
- மெல்லடிக்குத் தொண்டேயாம் என்று ஆடுபாம்பே
105
[தொகு]கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே
- விண்டவர்கள் ஒருக்காலும் கண்டிடார்களே
கொண்டகோலம் உள்ளவர்கள் கோன் நிலை காணார்
- கூத்தாடிக் கூத்தாடியே நீ ஆடுபாம்பே
106
[தொகு]ஆறுகலைக் குச்சுக்குள்ளே ஆடும் ஒருவன்
- அயல்வீடு போகுமுன்னே அரண்கோ லிக்கொள்ளு
வேறுபட்டால் அவன் தனை மீட்டல் அரிதே
- மேவிமுன்னே விடாது கொண்டு ஆடுபாம்பே
107
[தொகு]எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என்
- ஏகன் அடி நெஞ்சமதில் எண்ணா விடிலே
பண்ணரிய தவப்பயன்பத்தி இல்லையேல்
- பாழ்படும் என்று துணிந்து ஆடுபாம்பே
108
[தொகு]எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என்
- எங்கள் ஆதி பாதாம்புயம் எண்ணாக் காலையில்
இவ்வுலக வாழ்வு தானும் இன்றே அறுமென்று
- எண்ணிக் கர்த்தன் அடிநினைந்து ஆடு பாம்பே
109
[தொகு]மணக்கோலங் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே
- மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலம் கண்டுபின்னுந் துறவா வீட்டில்
- பிறப்புக்கே துணையாம் என்று ஆடுபாம்பே
110
[தொகு]பிறப்பையும் இறப்பையும் அறுத்து விடயான்
- பெருமருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன்கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
- திறந்திடும் வகையறிந்து ஆடுபாம்பே
111
[தொகு]இறந்தவர் ஐவர்அவர் இட்டமானவர்
- எய்தும் அவர் இறந்தார் என்று எல்லவர்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர்
- வகையறிந்திடவே நின்று ஆடுபாம்பே
112
[தொகு]ஆகார முதலிலே பாம்ப தாக
- ஆனந்த வயலிலே படம் விரித்தே
ஊகார முதலிலே யொத்து ஒடுங்கி
- ஓடி வகாரத்தின் நாவை நீட்டிச்
சிகாரங் கிடந்ததோர் மந்திரத்தைச் :
- சித்தப் பிடாரனார் போதஞ் செய்ய
மாகாரப் பிறப்பையும் வேர் அறுத்து
- மாயபந்தம் கடந்தோம் என்று ஆடு பாம்பே
113
[தொகு]தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
- தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
- மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
- அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில்
- இனிப் பிறப்பு இல்லையென்று ஆடுபாம்பே
114
[தொகு]களிமண்ணினால் ஒரு கப்பல் சேர்த்தே
- கனமான பாய்மரங் காண நாட்டி
அளிபுலந் தன்னையே சுக்கானாக்கி
- அறிவென்னும் ஆதாரச் சீனி தூக்கி
வெளியென்னும் வட்டத்தே யுள்ளடக்கி
- வேதாந்தக் கடலினை வெல்ல வோட்டித்
தெளிவுறு ஞானியார் ஓட்டுங் கப்பல்
- சீர்பாதஞ் சேர்ந்தது என்று ஆடு பாம்பே
115
[தொகு]உள்ளத்துக் குள்ளேயே உணர வேண்டும்
- உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
மெள்ளக் கனலை எழுப்ப வேண்டும்
- வீதிப் புனலிலே செலுத்த வேண்டும்
கள்ளப் புலனைக் கடிந்து விட்டு
- கண்ணுக்கு மூக்கு மேற் காண நின்று
தெள்ளு பரஞ்சோதி தன்னைத் தேடிச்
- சிர்பாதம் கண்டோம் என்று ஆடு பாம்பே
116
[தொகு]ஓங்காரக் கம்பத்தின் உச்சி மேலே
- உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே
- ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
சாங்காலம் இல்லாமல் தாணுவோடே
- சட்டதிட்டமாய்ச் சேர்ந்து சாந்தமாகத்
தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து
- தொந்தோம் தொந்தோம் என்று ஆடு பாம்பே
117
[தொகு]விரகக் குடத்திலே பாம்படைப்போம்
- வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
கரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்
- காலக் கடுவெளி நின்று ஆட்டுவிப்போம்
துரகந் தனிலேறித் தொல் உலகெங்கும்
- சுற்றி வலம் வந்து நித்ய சூட்சங் காண்டும்
உரையற்ற மந்திரஞ் சொல்லி மீட்போம்
- ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடு பாம்பே
118
[தொகு]காயக் குடத்திலே நின்ற பாம்பைக்
- கருணைக் கடலிலே தியங்கவிட்டு
நேயச் சுழுமுனை நீடு பாய்ச்சி
- நித்தியமான வத்துவை நிலைக்க நாடி
மாயப் பெருவெளி தன்னில் ஏறி
- மாசற்ற பொருளினை வாய்க்கத் தேடி
ஆய்த்துறை கடந்தப் பாற்பாழின்
- ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
119
[தொகு]மூலத் தலத்திலே நின்ற கருத்தை
- முற்றுஞ் சுழுமுனை தன்னில் ஊடே
மேலத் தலத்திலே விந்து வட்டம்
- வேலை வழியிலே மேவி வாழும்
பாலத் திருத்தாயக் கருணையதனால்
- பரகதி ஞான சொரூபமாகி
ஆலச் சயனத்து மாலுடன் நின்றே
- ஆனந்தஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
120
[தொகு]புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும்
- புரவி யெனும் மனத்தை ஒருமைப் படுத்தி
மலபந்த வுலகங் கடந்ததாலே
- மன்னுகுரு பாதத்தின் நிலையைநாடித்
தலம் ஐந்து பூலோகங் கடந்ததாலே
- சந்திர மண்டிலமும் கடந்த தாகும்
அலமந்து பூலோகக் கடலை நீக்கி
- ஆனந்தமாகி நின்று ஆடு பாம்பே
121
[தொகு]குருவென்னும் ஆசானின் உருவெடுத்துக்
- குறியான ஞானந்துப் பாக்கி யாக்கி
அருளென்னும் அருளையே உண்டாக்கி
- ஆனந்த மாகவே அதைக் கடந்தே
மருளென்னும் மாதர்மன் நெறியைத் தொட்டு
- வாங்காமல் எரிந்திட நெட்டை யிட்டுப்
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
- பற்றானைப் பற்றிநின்று ஆடுபாம்பே
122
[தொகு]கன்னான் குகையிலே கான்மறிப்போம்
- கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம்
- சுருதி யருங்கலவி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே எரிப்போம்
- மெய்ப்பொருள் குறிகண்டு விருப்பை அடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
- பராபரஞ் சேர்ந்தோம் என்று ஆடுபாம்பே
123
[தொகு]சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
- சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்
- வேண்டாத மனையினில் உறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
- சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
- அறியார்கள் இதையென்று ஆடு பாம்பே
124
[தொகு]நெட்டெழுத்து அதனிலே நிலைபி டித்து
- நீங்கா எழுத்திலே வாலை முறுக்கி
விட்டு அவ் எழுத்திலே படம் விரித்து
- விண்ணின் வழியிலே விளையாடி
பட்ட எழுத்தையும் பதித்திருப்போம்
- பன்னிரண் டாமெழுத்தில் பன்னிக் கூடித்
திட்டமுடன் எமக்கருள் தேசிகனார் தம்
- சீர்பாதஞ் சேர்ந்தோம் என்று ஆடு பாம்பே
125
[தொகு]ஊசிதுளைக் குடத்தினில் பாம்பை அடைப்போம்
- உலகெலாம் சுற்றியே உலாவி வருவோம்
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம்
- மனமொத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
- மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம்
பேசும் எழுத்தையும் விழுங்கி விடுவோம்
- பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடு பாம்பே
126
[தொகு]ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
- அக்கினிக் கோட்டைமேல் ஏறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின் மேல் விட்டே ஆட்டுவோம்
- மனம் வாக்குக் காயத்தை இரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
- நமனற்ற நாதன் பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண்டு ஏறி விடுவோம்
- யாரும் இதை அறியார் என்றஃ ஆடு பாம்பே
127
[தொகு]வடக்குங் கிழக்குமாக நூலை இழைப்போம்
- மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம்
- நடவா வழியினிலே புடைவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
- கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே ஏகத்துள்ளே வைக்கவும் வல்லோம்
- ஆதிபதங் கண்டோம் என்று ஆடு பாம்பே
128
[தொகு]சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்
- சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலிஇ ரப்போம்
- பத்தெட்டு மூன்று படிகடந்தோம்
ஊத்தைச் சடத்தினைப் புடமே இடுவோம்
- உளவன் எமக்குநல் உறுதிசொல்லப்
பார்த்துரை இதன் மெய்பலிக்க எண்ணிப்
- பதனம் பதனம் என்று ஆடு பாம்பே
129
[தொகு]மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
- மணிவட்ட வாசியை வாரி உண்போம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
- வக்கிர சொப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே ஆட்டுவோம்
- பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோம் என்றே
- சீர்பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே
- முற்றும்