பாரதிதாசன்/இணைப்பு
இணைப்பு
1. பாரதிதாசன் பாடல்கள் கால வரிசை
வ.எண். | முதற் பதிப்பு | நூற்பெயர் |
1 | 1920 | மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப் |
பாட்டு | ||
2 | 1925 | மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் |
பஞ்சரத்நம் | ||
3 | 1926 | மயிலம் சுப்பிரமணியர் துதியமுது |
4 | 1930 | கதர் இராட்டினப்பாட்டு |
5 | 1930 | சிறுவர் சிறுமியர்தேசியகீதம் |
6 | 1930 | தொண்டர் படைப்பாட்டு |
7 | 1930 | தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு |
8 | 1930 | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் |
9 | 1931 | சுயமரியாதைச் சுடர் |
10 | 1937 | புரட்சிக்கவி |
11 | 1938 | பாரதிதாசன் கவிதைகள் |
12 | 1941 | எதிர்பாராத முத்தம் |
13 | 1942 | குடும்ப விளக்கு |
14 | 1942 | இசையமுது |
15 | 1944 | இருண்ட வீடு |
16 | 1944 | அழகின் சிரிப்பு |
17 | 1944 | காதல் நினைவுகள் |
18 | 1944 | குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி |
விருந்தோம்பல் | ||
19. | 1944 | பாண்டியன் பரிசு |
20. | 1945 | தமிழியக்கம் |
21. | 1948 | முல்லைக்காடு |
22. | 1948 | காதலா? கடமையா? |
23. | 1948 | இந்தி எதிர்ப்புப் பாட்டு |
24. | 1948 | கடல் மேற் குமிழிகள் |
25. | 1948 | குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவு, |
திருமணம் | ||
26. | 1948 | அகத்தியன் விட்ட புதுக்கரடி (ஒரே |
தொகுப்பில்) | ||
27. | 1948 | நல்ல முத்துக் கவிதை " " |
28. | 1948 | திராவிடர் திருப்பாடல் " " |
29. | 1949 | ஏற்றப்பாட்டு |
30. | 1949 | பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் |
பகுதி | ||
31. | 1949 | தமிழச்சியின் கத்தி |
32. | 1949 | பாரதிதாசனின் ஆத்தி சூடி |
33. | 1949 | திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் |
34. | 1950 | குடும்ப விளக்கு நான்காம் பிரிவு - |
மக்கட் பேறு | ||
35. | 1950 | குடும்ப விளக்கு ஐந்தாம் பிரிவு - |
முதியோர் காதல் | ||
36. | 1951 | அமிழ்து எது? |
37. | 1952 | பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் |
தொகுதி (இரண்டாம் பதிப்பு) | ||
38. | 1952 | இசையமுது இரண்டாம் பகுதி |
39. | 1954 | பொங்கல் வாழ்த்துக் குவியல் |
40. | 1955 | பாரதிதாசன் கவிதைள் மூன்றாம் |
தொகுதி | ||
42. | 1958 | இளைஞர் இலக்கியம் |
43. | 1959 | குறிஞ்சித் திட்டு |
44. | 1962 | கண்ணகி புரட்சிக் காப்பியம் |
45. | 1962 | மணிமேகலை வெண்பா |
46. | 1964 | பாரதிதாசன் பன்மணித்திரள் |
47. | 1977 | காதல் பாடல்கள் |
48. | 1978 | குயில் பாடல்கள் |
49. | 1978 | பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி |
50. | 1978 | தேனருவி (38 பாடல்கள்) |
51. | 1978 | ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது |
52. | 1978 | தமிழுக்கு அமுதென்று பேர் |
53. | 1978 | புகழ் மலர்கள் |
54. | 1978 | நாள் மலர்கள் |
55. | 1978 | வேங்கையே எழுக |
56. | 1980 | பாரதிதாசன் ஆத்தி சூடி + பொங்கல் |
வாழ்த்துக் குவியல் + இளையோர் ஆத்தி சூடி | ||
57. | 1982 | பாரதிதாசன் கவிதைகள் (நான்கு |
தொகுதிகள் + புதிய பாடல்கள் 17) |
பாடு பொருள் அடிப்படையில் பூம்புகார் பதிப்பகம் பகுத்தும், தொகுத்தும் வெளியிட்டவை
1. | 1992 | பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர் |
(+ ஒரு புதிய பாடல்) | ||
2. | 1992 | இயற்கை |
3. | 1992 | தமிழ் (+ ஒரு புதிய பாடல்) |
4. | 1992 | சிறுகாப்பியங்கள் |
5. | 1992 | இளைஞர் இலக்கியம் 1 |
6. | 1992 | சமுதாயம் (+ இரண்டு புதிய பாடல்கள்) |
7. | 1994 | இளைஞர் இலக்கியம் 2 |
8. | 1994 | பொங்கல் வாழ்த்து இலக்கியம் ( ஆறு |
புதிய பாடல்கள்) | ||
9. | 1994 | காதல் (+ இரண்டு புதிய பாடல்கள்) |
குறிப்பிடத்தக்க பிற தொகுப்புககள்
1. 1993 பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), ஆ. திருவாசகன், சுரதா கல்லாடன் (தொ. ஆ.)
2. 1994 உலகம் உன் உயிர் (தலையங்கக் கவிதைகள் (+ நான்கு புதிய கவிதைகள்), ச.சு. இளங்கோ (ப.ஆ.)
3. 1995 பாரதிதாசன் வண்ணப்பாடல்கள் (+ நான்கு புதிய பாடல்கள்) ய. மணிகண்டன், (தொ.ப)
4. 2000 பாரதிதாசன் திரைப்பாடல்கள், வாமனன் (தொ.ஆ)
பிறர் படைப்புகளுடன் பாரதிதாசன் கவிதைகளும் சேர்க்கப்பட்டு வெளிவந்த நூல்கள்
1. 1937 இந்தி எதிர்ப்புப் பாடல்கள், குடிஅரசுப் பதிப்பகம், ஈரோடு
2. 1945 எது இசை? கமலா பிரசுராலயம், சென்னை
3. 1946 தன்மானத் தாலாட்டு, ஸ்ரீ இலக்ஷ்மி நூல் பதிப்பகம், திருவத்திபுரம் வ.ஆ.
4. 1948 மகாகவி பாரதியார், ஞாயிறு நூற் பதிப்பகம், புதுச்சேரி
இவற்றில் இடம் பெற்ற பாரதிதாசன் பாடல்கள் வேறு கவிதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பெற்றுள்ளன.
முன்னர் வேறு நூல்களில் இடம்பெற்ற பாடல்களே தெரிவு செய்து தொகுக்கப்பட்டு வேறு பெயரில் வெளிவந்த நூல்கள்
1. 1942 காதற்பாட்டு
2. 1958 தாயின்மேல் ஆணை
3. 1993 தமிழ் உணர்ச்சி
பாரதிதாசன் நாடகங்கள் - கால வரிசை
I. நூல் வடிவில் வெளி வந்தவை
1. 1939 இரணியன் அல்லது இணையற்ற வீரன்
2. 1944 நல்ல தீர்ப்பு
3. 1944 கற்கண்டு
4. 1944 பொறுமை கடலினும் பெரிது (ஒரே தொகுப்பில்)
5. 1946 அமைதி
6. 1947 செளமியன்
7. 1948 படித்த பெண்கள்
8. 1949 சேரதாண்டவம்
9. 1950 இன்பக்கடல் (ஒரே தொகுப்பில்)
10. 1950 சத்திமுத்தப் புலவர் (ஒரே தொகுப்பில்)
11. 1951 கழைக்கூத்தியின் காதல்
12. 1959 பாரதிதாசனின் நாடகங்கள்
அ. கற்கண்டு
ஆ. பொறுமை கடலினும் பெரிது
இ. இன்பக் கடல்
ஈ. சத்திமுத்தப் புலவர்
13. 1967 பிசிராந்தையார்
14. 1978 தலைமலை கண்ட தேவர்
அ. தலைமலைகண்ட தேவர்
ஆ. கழைக் கூத்தியன் காதல் (1951)
இ. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும்
ஈ. ஆரிய பத்தினி மாரிஷை
உ. ரஸ்புடீன்
ஊ. அம்மைச்சி
எ. வஞ்சவிழா
ஏ. விகடக் கோர்ட்
15. 1980 கோயில் இரு கோணங்கள்
அ. கோயில் இரு கோணங்கள்
ஆ. சமணமும் சைவமும்
இ. மூளை வைத்தியம்
ஈ. குலத்தில் குரங்கு
உ. மருத்துவர் வீட்டில் அமைச்சர்
ஊ. ஆரிய பத்தினி மாரிஷை (தலைமலைகண்ட தேவர் நூலிலும்)
எ. முத்துப் பையன் (குழந்தை நாடகம்)
ஏ. மேனி கொப்பளித்ததோ?
16. 1992 குமர குருபரர் நாடகம் (1944-திரைப்படத்திற்காக எழுதியது)
17. 1994 பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
க. அச்சு வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள்
அ. இசைக் கலை (யசோதர காவியம்)
ஆ. பறவைக்கூடு 1 & 11 (சைகோன் பின்னணி)
இ. மக்கள் சொத்து (கதை வடிவினது)
உ. நூல் வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள்
அ. ஐயர் வாக்குப் பலித்தது
ஆ. கொய்யாக்கனிகள் (கவிதை நாடகம் - முற்றுப் பெறாதது)
இ. சங்கீத வித்வானோடு
ஈ. ஆக்கம்
உ. வினை
18. 2003 போர்க்காதல்
அ. போர்க்காதல்
ஆ. கொய்யாக் கனிகள் (முற்றுப் பெற்றது)
இ. படித்த பெண்கள்
ஈ. ஆனந்த சாகரம்
2. நாடகப் பாங்கின
காவியம் சிறு காப்பியம் எனும் தலைப்புகளில் தொகுதிகளில் இடம்பெற்றவை
19. 1937 புரட்சிக் கவி (1944-சிறு மாற்றங்களுடன் நாடகமாக நடத்தப்பெற்றது)
20. வீரத்தாய் (1935 - நெட்டப்பாக்கம் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் நடிப்பதற்கு முதலில் நாடகமாக எழுதப்பட்டது.
1938 பாவேந்தரின் மூத்த மகள் வீரத்தாயாகவும் மகன் சுதர்மனாகவும் நடிக்க நடத்தப்பெற்றது
21. 1949 ஒன்பது சுவை
22. 1949 போர் மறவன்
23. 1949 காதல் வாழ்வு
II. நாடகமாக நடிக்கப் பெற்றுக் கிடைக்காதவை
1. 1931 சிந்தாமணி
2. 1963 பாரதப்பாசறை ('கற்கண்டு நாடகப் பகுதியையும் சீன எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்டது)
IV. நாடகம் எழுதப்பெற்று ஒத்திகை நடத்தப் பெற்றும் அரங்கேறாதவை - முழுமையாகக் கிடைக்காததும் நூலாகாததும்
1. 1932 லதாக்ருகம்
2. 1935 நடுநாட்டின் வர்த்தகன் அல்லது நட்பின் இலக்கணம் (சேக்சுபியரின் வெனிசு வாணிகன் தமிழ் வடிவம்)
V. பெயரளவில் நாடகம் எனக் குறிக்கப்பெற்றவை - நாடக வடிவில் நூல்களாக வெளிவராதவை
1. தமிழச்சியின் கத்தி (1937)
2. பாண்டியன் பரிசு (1940
3. கருஞ்சிறுத்தை (1949)
பாரதிதாசனின் பிற உரைநடை ஆக்கங்கள்
I. கட்டுரைகள்
1. 1980 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (சொல்லாய்வுகள்)
2. 1980 பாட்டுக்கு இலக்கணம்
3. 1983 மானுடம் போற்று
4. 1992 பாரதியாரோடு பத்தாண்டுகள் ( பொழிவுகள், கவிதைகள்)
5. 1994 உலகுக்கோர், ஐந்தொழுக்கம் (தலையங்கக் கட்டுரைகள்)
6. 1996 இலக்கியக் கோலங்கள் (பாடல் விளக்கக் குறிப்புகள், செய்திகள்)
11. உரை
1. 1992 பாரதிதாசன் திருக்குறள் உரை டாக்டர் ச.சு. இளங்கோ (ஆ.ப)
2. 1994 பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் - திருக்குறள் உரை: முனைவர் நா. செங்கமலத்தாயார் (தொ.ஆ)
Ill. புனை கதைகள்
1. 1955 பாரதிதாசன் கவிதைகள் (+ கட்டுரைகள், கிண்டல் துணுக்குகள்)
2. 1980 ஏழைகள் சிரிக்கிறார்கள் (நீக்கம் + புதிய கதைகள்) ச.சு. இளங்கோ (தொ.ஆ.)
3. 1994 பாரதிதாசன் சிறுகதைகள் (நீக்கம் புதிய கதைகள்) மு. சாயபுமரைக்காயர் (தொ.ஆர்)
4. 1994 பாரதிதாசன் புதினங்கள்
அ. அன்னை
ஆ. விஞ்ஞானி
இ. அனைவரும் உறவினர்
ஈ. பக்த ஜெயதேவர்
உ. குமரகுருபரர்
ஊ. எதிர்பாராத முத்தம்
எ. ஆத்மசக்தி
ஏ. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை
ஐ. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும்
IV. கிண்டல் துணுக்குகள்
1981 சிரிக்கும் சிந்தனைகள்
V. வினாவிடைகள்
1981 கேட்டலும் கிளத்தலும்
VI. திரைக்கதை உரையாடல்கள்
1940 காளமேகம்
1945 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
1946 சுபத்ரா
1947 சுலோசனா
1950 பொன்முடி
1952 வளையாபதி
1964 மகாகவி பாரதியார் வரலாறு
சொற்பொழிவுகள்
1947 கவிஞர் பேசுகிறார்
1950 முத்தமிழ் + (பிறர் பொழிவுகள்)
1954 தமிழ் இன்பம்
1980 பாரதிதாசன் பேசுகிறார் - (புதிய பொழிவுகள்)
துணை நூல்கள்
1. இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் - முனைவர். இரா. இளவரசு
2. கறுப்புக் குயிலின் நெருப்புக்குரல் - மன்னர் மன்னன்
3. பாட்டுப் பறவைகள் - மன்னர் மன்னன்
4. பாவேந்தர் வாழ்க்கைப் பாங்கு - மன்னர் மன்னன்
5. பாவேந்தர் நினைவுகள் - கவிஞர் முருகு சுந்தரம்
6. அரும்புகள் மொட்டுகள் மலர்கள் - கவிஞர் முருகு சுந்தரம்
7. குயில்கள் கூவிக் கொண்டிருக்கும் - கவிஞர் முருகு சுந்தரம்
8. புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் - கவிஞர் முருகு சுந்தரம்
9. பாவேந்தர் படைப்பில் அங்கதம் - கவிஞர் முருகு சுந்தரம்
10. மகாகவி பாரதியார் -வ.ரா.
11. பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் - முனைவர் தமிழன்பன்
12. நினைவுகளில் பாவேந்தர் - கவிஞர் பொன்னடியான்
13. எங்கள் நினைவில் புரட்சிக் கவிஞர் - கவிஞர் பொன்னடியான்
14. பாவேந்தருடன் பயின்ற நாள்கள் - பாவலர் மணி சித்தன்
15. பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் 1991- பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
16. பாரதி மலர் 1987-கோவை
17. பாரதிதாசன் இதழ்ப் பணிகள் - முனைவர் மா. அண்ணாதுரை
18. பாரதிதாசன் - உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
19. Bharathidasan Critical Perspectives - Madurai Kamaraj University
20. An appreciation - That kiss most unexpected -M.S.Venkatachalam
21. பாரதிதாசன் பார்வையில் பாரதி - முனைவர் ச.சு.இளங்கோ
22. பாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு - முனைவர் ச.சு. இளங்கோ
23. பாரதிதாசன் திரைப்பாடல்கள் - வாமனன்
24. பாரதியைப் பற்றி நண்பர்கள் - பத்மநாபன்
25.கவிஞரும் காதலும் - பேராசிரியர் இராமநாதன் காரந்தை
26. பாவேந்தர் பாரதிதாசன் பழம் புதுப் பாடல்கள் - முனைவர் இரா.இளவரசு
27. பாவேந்தரின் இசைத்தமிழ் - முனைவர் இரா. திருமுருகன்
28. பாரதிதாசன் ஒரு கல்வியாளர் - புலவர் விருத்தாம்பிகை
அண்ணாதுரை.
பாரதிதாசன்(1891-1964) இளமையில் பக்திக் கவிஞராக மலர்ந்து, தேசியக் கவிஞராக வளர்ந்து, தன்மான இயக்கத்தின் புரட்சிக் கவிஞராக முதிர்ந்து,மனித நேயக் கவிஞராக நிறைவு பெற்றவர். தமிழ் வளர்ச்சி, பெண் விடுதலை,சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு, பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோள்களுக்குத் தம் எழுத்துக்களால், ஓயாமல் குரல் கொடுத்தவர். 1929 ஆம் ஆண்டிலேயே கருத்தடை பற்றிய சிந்தனைகளைக் கவிதையில் வடித்தவர். நல்ல குடும்பத்தைப் பல்கலைக் கழகம் என்றவர். தமிழால் பாரதிதாசனும், பாரதிதாசனால் தமிழும் பெருமை பெற்றது நாடறிந்த உண்மை.
கவிஞர் முருகுசுந்தரம் (1929) கல்லூரி மாணவராக இருந்தபோது பாரதிதாசனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பும், அவரிடம் கவிதை பயிலும் வாய்ப்பும் பெற்றவர். தமிழாசிரியர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும், பாரதிதாசன் விருதும், தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும் பெற்றவர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றிலும், கவிதையியலிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்.
Barathidhasan(Tamil) Rs 25
ISBN 81-260-5
சாகித்திய