உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/15. பூலோக குமாரி

விக்கிமூலம் இலிருந்து

15. பூலோக குமாரி

பல்லவி

பூலோக குமாரி
ஹே அம்ருத நாரி

அனுபல்லவி

ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.

சரணம்

பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-
லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.