பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/42. சாகா வரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

42. சாகா வரம்

பல்லவி

சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா!-சரோஜ பாதா!

சரணங்கள்

ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்த மாகிய நித்ள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)

வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையுன் மென்தோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)

நித்யா,நிர்மலா,ராமா
நிஷ்க ளங்கா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா,ராமா,
சரணம்,சரணம்,சரண முதாரா! (சாகா)