பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/46. கண்ண பெருமானே!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

46. கண்ண பெருமானே!

காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!

ஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!

வேறு

போற்றி!போற்றி!போற்றி!போற்றி!
கண்ண பெருமானே!-நீ
பொன்னடி போற்றி நின்றேன்
கண்ண பெருமானே!