பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/47. நந்த லாலா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

47. நந்த லாலா

ராகம்-யதுகுல காம்போதி தாளம்-ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!