பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/52. கண்ணம்மாவின் நினைப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

52. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா!
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற்
பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண்
பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா? (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம்
மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா! (நின்னையே)