பாரதியாரின் தேசிய கீதங்கள்/28. சுதந்திர தாகம்
Appearance
28. சுதந்திர தாகம்
ராகம் - கமாஸ் தாளம் - ஆதி
- என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
- என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
- என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
- என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
- அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
- ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
- வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
- மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ?
- பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
- பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
- தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
- தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
- அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?
- ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
- வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ!
- வீர சிகாமணி! ஆரியர் கோனே!