பாரதியாரின் தேசிய கீதங்கள்/45. வாழ்க திலகன் நாமம்
Appearance
45. வாழ்க திலகன் நாமம்!
பல்லவி
- வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
- வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!
சரணங்கள்
- நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
- நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
- ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே!
- எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க)
- கல்வி யென்னும் வலிமை கொண்ட
- கோட்டை கட்டினான் - நல்ல
- கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
- அகழி வெட்டினான்
- சொல் விளக்க மென்ற தனிடைக்
- கோயி லாக்கினான்
- ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
- கொடியைத் தூக்கினான் (வாழ்க)
- துன்பமென்னும் கடலைக் கடக்குந்
- தோணி யவன் பெயர்
- சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
- சூழ்ச்சி யவன் பெயர்
- அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
- புதுமலர் அவன்பேர்
- ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
- அறிகுறி யவன்பேர். (வாழ்க)