பாரதியாரின் தேசிய கீதங்கள்/7. ஜயபாரத
Appearance
7. ஜயபாரத
- சிறந்து நின்ற சிந்தை யோடு
- தேயம் நூறு வென்றிவள்
- மறந்த விர்ந்த் நாடர் வந்து
- வாழி சொன்ன போழ்தினும்
- இறந்து மாண்பு தீர மிக்க
- ஏழ்மை கொண்ட போழ்தினும்
- அறந்த விர்க்கி லாது நிற்கும்
- அன்னை வெற்றி கொள்கவே!
- நூறு கோடி நூல்கள் செய்து
- நூறு தேய வாணர்கள்
- தேறும் உண்மை கொள்ள இங்கு
- தேடி வந்த நாளினும்
- மாறு கொண்டு கல்லி தேய
- வண்ணி தீர்ந்த நாளினும்
- ஈறு நிற்கும் உண்மை யொன்று
- இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே!
- வில்லர் வாழ்வு குன்றி ஓய
- வீர வாளும் மாயவே
- வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
- மெய்மை நூல்கள் தேயவும்
- சொல்லும் இவ் வனைத்தும் வேறு
- சூழ நன்மை யுந்தர
- வல்ல நூல் கெடாது காப்பள்
- வாழி அன்னை வாழியே!
- தேவ ருண்ணும் நன்ம ருந்து
- சேர்ந்த கும்பம் என்னவும்
- மேவுவார் கடற்கண் உள்ள
- வெள்ள நீரை ஒப்பவும்
- பாவ நெஞ்சினோர் நிதம்
- பறித்தல் செய்வ ராயினும்
- ஓவி லாதசெல்வம் இன்னும்
- ஓங்கும் அன்னை வாழ்கவே!
- இதந்தரும் தொழில்கள் செய்து
- இரும்பு விக்கு நல்கினள்
- பதந்தரற் குரிய வாய
- பன்ம தங்கள் நாட்டினள்
- விதம்பெறும்பல் நாடி னர்க்கு
- வேறொ ருண்மை தோற்றவே
- சுதந்திரத்தி லாசை இன்று
- தோற்றி னாள்மன் வாழ்கவே!