பேச்சு:பொருநராற்றுப்படை
தலைப்பைச் சேர்சங்க இலக்கியம் அனைத்தையும் -மூலத்தைமட்டும்- விக்கிப்பீடியாவில் ஏற்றும்முயற்சியில், பத்துப்பாட்டில் (இதுவரை ஏற்றப் பெறாதவற்றை ஏற்றும் முயற்சியில்) முதல்கட்டமாகப் 'பொருநராற்றுப்படை' பதிவு செய்யப்படுகின்றது. இதுகுறித்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. பொருளோடு பதிவுசெய்தால், பலருக்கும் மிகவும் பயன்படும் என்பது என்கருத்து. முதலில் மூலத்தை ஏற்றலாம்; பின்அதுபற்றிச் சிந்திக்கலாம். அன்புடன்,--Meykandan 15:52, 17 மார்ச் 2010 (UTC)
சங்க இலக்கியப் பாடல்களைப் பாஓசைசிதையாது அப்படியே இருக்கும் வண்ணம், சீரமைப்புடன் பதிப்பதே சிறப்பு. ஆனால், அதில் உள்ள குறை என்னவென்றால், ஓசையுடன் படிக்கலாமேயொழியப் பொருள்புரியும்படி பிரித்துப் படிக்க இக்காலத்தில் பெரும்பாலானோருக்கு முடிவதில்லை. அதற்குக் காரணம் பயிற்சி இல்லாமையே; பாடல் கடினம் என்று, இன்று உள்ளோர் கூறுவது பிழை. தமிழில் உள்ளதால், அது தமிழில்பேசும் எனக்குப்புரியவேண்டும் என்று எண்ணுபவர் மிகுதி. ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது இது என்பதை. மேலும், எத்தனைதடவை படித்தார்கள் அதை? ஒருதடவைகூடப் படித்து இருக்கமாட்டார்கள். கொஞ்சம் கூடப் பயிற்சி இல்லாது,படித்ததும் புரியவேண்டும் அந்தப்பழைய இலக்கியம் என்பது சரியா? முயல்க. அது கட்டாயம் புரியும். சங்கத்தமிழ் எளிமை யானதுதான். ஆனால், இன்று அதனை அணுகும்முறை சரியில்லை. நிற்க. நான் கூறவந்தது என்னவென்றால், பழையமரபும் போற்றப்பட வேண்டும், புதிதாகப் படிப்பவர்களும் எளிதாகப் படிக்கவேண்டும் என்பதற்காக முதலில் பழைய பாவடிவம் மாறாது, ஓர் அடியைக் கொடுத்துவிட்டுப் பின் அதனையே இக்காலத்துக்கு ஏற்றவாறு பொருள் விளங்கும்படி பதிப்பித்துள்ளேன். இதில் எனக்கு என்ன குறை படுகின்றது என்றால், பின்னால் பிரித்துக்கொடுக்கும் அடிகள் ஓர் அழகிய வரிசைமுறையில் இல்லாமல் உள்ளன.அதுதான் குறை. பார்ப்பதற்கு அழகாய் இல்லை. இக்குறையினை எப்படிப்போக்குவது? அதாவது, பழையமரபுப்படியே பிரிக்காமல் சீர்கள் சரியாக ஓசையுடன்அமையும்படி பதிப்பித்துள்ள வரிக்குப் பக்கத்திலேயே பிரித்தவடிவமும் அமையவேண்டும். அது ஒழுங்காகவும் வரிசையாகவும் இருக்கும்படி அமைக்கவேண்டும்.எப்படி? தெரிந்த அன்பர்கள் கூறவேண்டுகின்றேன். நன்றி. அன்புடன்,--Meykandan 07:27, 19 மார்ச் 2010 (UTC)
சங்கஇலக்கியம் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படையினைப் பிழையில்லாமல் பதிப்பிக்க எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது; அதையும் மீறிப் பிழை இருப்பின் திருத்தி உதவ வேண்டுகின்றேன். இல்லையென்றால் எனக்கு, அப்பிழை உள்ள இடங்களைத் தெரிவிக்கவேண்டுகின்றேன். நன்றி.--Meykandan 14:38, 24 மார்ச் 2010 (UTC)
Start a discussion about பொருநராற்றுப்படை
Talk pages are where people discuss how to make content on விக்கிமூலம் the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve பொருநராற்றுப்படை.