மகான் குரு நானக்/குருநானக் கைது

விக்கிமூலம் இலிருந்து
8.குருநானக் கைது

பாபக்தாத் நகர் சென்று வந்த சத்குருவும், அவரது சீடர்களும் சில மாதங்கள் ஒய்வெடுத்துக் கொண்ட பின்பு, மீண்டும் தங்களது புனித பயணத்தைத் துவங்கினார்கள்.

அவர்கள் மூவரும் அமெனாபாத் நகரில் சத்குருவின் ஏழை நண்பரான தச்சர் வீட்டிலே தங்கியிருந்தார்கள். அப்போது லாயச் சக்ரவர்த்தியான பாபர் படைகள் டெல்லி மாநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

மறுநாள் சத்குருவும், அவரது சீடர்களும் தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தபோது, பாபர் படைகள் தச்சர் வீட்டைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்ததைக் கண்டார்கள். அமெனாபாத் நகரில் சிறைபிடிக்கப்பட்ட மற்ற மக்களோடு, குருநானக்கும், அவரது சீடர்களும் கைது செய்து சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த நாளில் யார் யார் சிறைபிடிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தலையில் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து சிறைக்கோ, விசாரணை மன்றத்துக்கோ அழைத்துச் செல்வது வழக்கம். அதைப் போலவேதான், பாபர் பேரரசன் ஆட்சியிலும் நடந்தது. குருநானக், மர்தானா, பாலா ஆகியோர் தலைகளில் பாபர் படையினர் பாரத்தை ஏற்றிச் சுமக்க வைத்து அழைத்துப் போனார்கள் மர்தான்ா பயந்தான்் எங்கே பாரம் தனது தலையை உடைத்து விடுமோ என்ற அச்சத்தால் ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

குருநானக், மர்தானா, பாலா ஆகியர் மூவர் தலை மீதும் சுமைகள் வைக்கப்பட்டன. தனது தலை உடைந்து நொறுங்கப் போகிறது என்று மர்தானா பயந்தான்! ஆனால், அவர்கள் தலைமேல் ஏற்றப்பட்ட சுமைகள் அவர்களது தலைகளின் மேல் அழுத்தி நெருக்காமல், ஒர் அரை அடி உயரத்தில் மிதந்து கொண்டே வந்தன. ஆனாலும், அவர்கள் நடந்து கொண்டேதான் இருந்தார்கள். ஏற்றப்பட்ட சுமைகளும் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

படைவீரர்கள் இந்த அற்புதத்தைப் பார்த்துத் திகைத்தார்கள். அப்படியே அசந்து நின்று விட்டார்கள். இந்தச் செய்தி பாபர் பேரரசனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவன் வந்து இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குள் அவர்கள் மூவரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து, சுமைகளை இறக்கி வைத்து விட்டார்கள். அதனால், அந்த அற்புதக் காட்சியைப் பாபரால் பார்க்க முடியவில்லை.

படைவீரர்கள் பாபருக்கு அனுப்பிய செய்தி பொய்யென்று அவன் நினைத்து விட்டான். இருந்தாலும், இந்த அதிசயம் உண்மைதானா என்று அவர் சோதிக்க நினைத்தார். சத்குரு சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்த தானியங்களைக் குத்திக் கொடுக்க வேண்டிய வேலைகளை சத்குருவுக்குப் பணிக்கப் பட்டது. குருநானக் எதைக் குறித்தும் கவலைப்படாமல் தியானம் செய்வதிலே மூழ்கி விட்டார்.

தானியத்தைக் குத்தும் இயந்திரம் தானாகவே வேலை செய்து கொண்டிருந்தது. குத்திய தானியம் வெவ்வேறாகப் பிரிந்து கொண்டிருந்தது. ஆட்கள் எவரும் வேலை செய்யவில்லை. தான்ாகவே எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

குருநானக் வேலை செய்யும் இடத்திற்குப் பேரரசர் பாபர் வந்து பார்த்தார். நானக் எந்த வேலையையும் செய்யவில்லை. அவர் கடவுள் தியானத்திலே திளைத்திருந்தார். ஆனால், எல்லா பணிகளும் தானாகவே நடந்து கொண்டிருப்பதை பாபர் கண்டார். சத்குரு தியானத்திலே இருந்து எழுந்திருக்கும் வரை பாபர் காத்துக் கொண்டே இருந்தார். அவர் எழுந்ததும், குரு நானக்கிடம் பாபர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பாபருக்கு சத்குரு அறிவுரைகளைக் கூறி ஆசி வழங்கினார். பாபர் தனது தவறுகளை உணர்ந்து, குருநானக் ஒரு மகான்தான் என்று நம்பி மனம் மாறிச் சென்றார்.

வழக்கம் போல சத்குரு தனது சொந்த ஊரான கர்தர்பூருக்குத் திரும்பினார். அவர் அங்கே சில நாட்கள் தங்கிய பிறகு, மீண்டும் தனது ஞானோபதேசப் பணிகளைச் செய்திட மேற்குத் திசைக்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்குத் திசையிலே உள்ள ஹசன் அப்தல் என்ற ஊரருகே உள்ள ஒரு குன்றருகே சென்று குருநானக் அமர்ந்தார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்று தங்கினார்கள். அந்த இடத்தில் பாறை ஒன்று இருந்தது. கதிரவ துடைய கடும் வெயில் அப்போது தகித்துக் கொண்டிருந்தது. மர்தான்ாவுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சத்குருவிடம், குருவே, நான் தாகத்தால் தவிக்கிறேன் என்றான். சத்குரு, கவலைப்படாதே மர்தானா அதோ அந்தக் குன்றின் மேலே ஒரு நீரூற்று இருக்கிறது. அதிலே இருக்கும் தண்ணீரைக் குடித்துத் தாகத்தை தனித்துக் கொண்டு வா என்று அவனை அனுப்பி வைத்தார்.

மர்தானா சென்றான். வேகமாக அந்தக் குன்றின் மேல் ஏறினான். நீரூற்று இருப்பதை மகிழ்ச்சியோடு கண்டான். தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த அவன், நீரைக் குடிக்கச் சென்ற போது, ஒரு பக்கிரி ஓடிவந்து, நீ யார் எப்படி இந்த நீரூற்றுக்கு வந்து தண்ணீரைக் குடிக்கலாம் என்றான். தடுத்தான்.

'சத்குரு தான் என்னை அனுப்பி வைத்தார். எனக்குத் தண்ணீர் தாகம் என்றான். உடனே பக்கிரி வேண்டுமானால், தனியாக ஒரு நீரூற்றைத் தோண்டித் தருமாறு உனது குருவிடம் போய் கூறு' என்று மர்தானாவைத் திருப்பி அனுப்பி விட்டான்.

மர்தான் திரும்பி வந்து, பக்கிரி கூறியதைக் குருவிடம் கூறினான். உடனே சத்குரு, 'மர்தானா, மறுபடியும் அதே பக்கிரியிடம் போ! பணிவாக அவரை வேண்டிக் கொள். அவர் உன்னைத் தண்ணீரைக் குடிக்க அனுமதிப்பார்' என்றார்.

தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த அவன், மீண்டும் பக்கிரியிடம் சென்று பணிவாகத் தண்ணீர் குடிக்க அனுமதிக்கும். படி வேண்டினான். ஆனாலும், பக்கிரி அவனுக்குத் தண்ணீர் குடிக்க அனுமதி தரவில்லை. தள்ளாடியபடியே மீண்டும் குருவிடம் வந்தான் மர்தானா.

தண்ணீர் குடிக்க அனுமதி மறுத்ததைக் குருவிடம் சொன்னான். களைத்துப் போய் கீழே உட்கார்ந்து விட்டான் மர்தானா.

உடனே குரு, மர்தானா கவலைப்படாதே. நீ உட்கார்ந்துக் கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு நீரூற்றைத் தோண்டு என்றார். சத்குரு கூறியபடியே மர்தானா தோண்டினான். தண்ணீர் பீறிட்டு வந்தது. அதைக் குடித்து அவன் தாகம் தீர்த்துக் கொண்டான்.

தண்ணீர் தர அனுமதிக்காத பக்கிரி, இருந்த இடத்திலிருந்தே நீரூற்று தோண்டியதையும், நிலத்து நீர் பீறிட்டு வந்ததையும், அவன் தண்ணீர் குடித்து தாகம் தணிந்து கொண்ட காட்சியையும் பார்த்தான். அப்போது மர்தான்ா தோண்டிய நீரூற்றிலே இருந்து வேகவேகமாக தண்ணீர் பீறிட்டு வந்ததையும், அதே நேரத்தில் அவனுடைய ஊற்றில் தண்ணீர் குறைந்து கொண்டே பூமியுள்ளே சென்று கொண்டிருந்ததையும் பக்கிரி கண்டு கோபம் கொண்டான். உடனே, தனது நீரூற்றருகே இருந்த ஒரு பாறையை அவன் மர்தானா நீரூற்றை நோக்கி உருட்டி விட்டு விட்டான். இதைக் கண்ட மர்தானா அலறிக் கொண்டு குரு நானக்கிடம் ஓடி வந்தான்். அவர் இதையெல்லாம் புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பாறை வெகு வேகமாக உருண்டோடி வரவே, உடனே சத்குரு தனது கையை மேலே உயர்த்தினார். அவ்வளவு தான்் வேகமாக உருண்டோடி வந்த அந்தப் பாறை அப்படியே நின்று விட்டது. நகரவில்லை. அந்தப் பாறை மீது குருநானக் கை அடையாளமும் அப்படியே பதிந்திருந்தது.

பக்கிரி இந்தக் காட்சியைப் பார்த்தான். அப்படியே வியந்து நின்றுவிட்டான். எவ்வளவு பெரிய பாறையை நாம் உருட்டி விட்டோம். அது எவ்வளவு வேகமாக உருண்டோடி வந்தது. அந்தப் பாறையைத் தனது கையை உயர்த்தி அப்படியே தடுத்து நிறுத்தி விட்டாரே அவர் யார்? என்று திகைத்து நின்றான்.

எனவே, அந்த மனிதர் சாதாரணமானவர் அல்லர். ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பக்கிரி, குன்றின் உயரத்திலே இருந்து கீழே இறங்கி ஓடி வந்தான். சத்குருவிடம் வந்து பணிந்து நின்றான். 'என்னை மன்னித்து விடுங்கள் மகானே என்று அவர் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினான். சத்குரு நானக் அவனது அழுகுரலைக் கேட்டு மன்னித்தார்.

உடனே பக்கிரி, இறைஞானியே, தெய்வீகச் சக்தியைப் பெறுவது எப்படி? என்றான்.

அதற்கு சத்குரு 'அன்பனே, நாம் ஒவ்வொருவரும் தன்னலத்தை மறக்க வேண்டும். உண்மை நெறியில் வாழ வேண்டும். நமக்கெலாம் ஒரு கடவுள் உண்டு. அந்த இறைவனை நாள்தோறும் வணங்கித் தியானம் செய்ய வேண்டும். அதுவே தேய்வீகச் சக்தியைப் பெறும் வழி" என்று அந்தப் பக்கிரிக்கு ஞானத்தைப் போதித்தார்.

சத்குரு நானக்கும், சீடர்களும், நேராக பெஷாவர் நகர் அருகிலிருக்கும் கோரக்ஹதி என்னும் இடத்திற்குச் சென்று, அங்கே இருந்த யோகிகளுடன் கலந்துரையாடிய பின்பு மீண்டும் தங்களது ஞானப் பயணத்தைத் துவங்கி நடந்தார்கள்.