மணமக்களுக்கு/ஒழுக்கம்
ஒழுக்கம்
11. ஐயரை வைத்து, மந்திரம் கூறி, அக்கினி வளர்த்து, சடங்குகள் பலவற்றைச் செய்து, திருமணம் செய்து கொள்கிறவர்கள், வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும், இவ்வுலகம் தாங்கிக் கொள்ளும். தமிழ்த் திருமணம், சீர்திருத்தத் திருமணம் செய்து
அவர்கள் பிறரைப் பார்த்து, அதன்படி நடந்து கொள்ளக் கூடாது. தங்களைப் பார்த்து, பிறர் பின்பற்றுகிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் உயிரினும் சிறந்தது, “உயிரைக் காப்பாற்றுவதை விட, ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்” என்பது வள்ளுவர் வாக்கு.
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பது வள்ளுவர் கருத்து. இதிலிருந்து ஆடை, அணிகலன், படிப்பு, பட்டம், பணம், பதவி, எழுத்து, பேச்சு ஆகியவைகளால் அடைய முடியாத மேன்மையை, ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” என்பது, மேன்மையை அடைவதற்குரிய ஒரே வழி ஒழுக்கம் ஒன்று மட்டுமே என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
ஒழுக்கத்தை இழந்து விட்டார்கள், பழியையே அடைவார்கள். பின்பு ஒருகால், அவர்கள் திருந்தி ஒழுக்கமாக நடந்து கொண்டாலும், உலகம் அவர்களை நம்பாது. அப்போதும் அவரடைவது பழியையே. ஒழுக்கத்தை இழந்து விட்டவர்கள், தாம் செய்த தவறுக்கு மட்டுமே. பழியேற்க மாட்டார்கள், செய்யாத தவறுக்கும் பழியேற்கும்படி வந்து விடும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். அது “இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்பதே. இவ்வறிவுரைகளை, மணமக்கள் தங்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.