மணமக்களுக்கு/சகிப்புத் தன்மை
Appearance
சகிப்புத் தன்மை
3. வீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன், மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டை வரை அடிப்படைக் காரணம் இரண்டே இரண்டுதான். பிறருடைய தேவையை அறிய மறுப்பது, பிறருடைய உரிமையை ஒப்ப மறப்பது ஆகிய இந்த இரண்டுந்தான். எங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கிறார்களோ, அங்கே உடனே தோன்றுவது சண்டைதான். கணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும், மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், பாகிஸ்தானின் தேவையை அறிய மறுத்தாலும், இந்தியாவின் உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான். அச்சண்டை ஒழிய மருந்தும் இரண்டுதான். அவை விட்டுக் கொடுக்கும்
மனப்பான்மையும், சகிப்புத் தன்மையுமே. இதை மனமக்கள் இருவரும் நன்குணர்ந்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.