உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/யாரைப் போல

விக்கிமூலம் இலிருந்து

யாரைப் போல

மூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை. புலவர்களெல்லாம் மலரும் மணமும் போல, வானும் நிலவும் போல, கரும்பும் சுவையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துகிறார்கள். நல்லறிஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும், சாரதாமணி தேவியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் சிலர் காந்தியடிகளும், கஸ்தூரி பாயும் போல, அறிஞர் அண்ணாவும், இராணியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள் இந்த 70 ஆண்டுகளாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவராவது ஒருவர் என்னைப் போல, என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான் அவர்கள், அவர்களைப் போல, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லிப் போய் விடுகிறார்கள். நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும் போது, என்னைப் போல, என் மனைவியைப் போல, என்னைப் போல, என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாக வேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணமக்களுக்கு/யாரைப்_போல&oldid=1646394" இலிருந்து மீள்விக்கப்பட்டது