அணிலே, அணிலே, ஓடிவா. அழகு அணிலே, ஓடிவா. கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா. பாதிப் பழம் உன்னிடம்; பாதிப் பழம் என்னிடம்; கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.