உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/திருவிழா

விக்கிமூலம் இலிருந்து

திருவி ழாவாம் திருவிழா!
தேரி ழுக்கும் திருவிழா!
ஒருமு கமாய் மக்களெல்லாம்
ஒத்துக் கூடும் திருவிழா.

பட்டு ஆடை உடுத்தலாம்;
பாட்டி கையைப் பிடிக்கலாம்;
கொட்டு மேளம் கேட்டதும்
‘குடுகு’ டென்று ஓடலாம்.

ஆனை, குதிரை பார்க்கலாம்:
அதிர் வேட்டுக் கேட்கலாம்.
சேனை போல யாவரும்
திரண்டு கூடிச் செல்லலாம்.


தேரில் சாமி வந்ததும்
தேங்கா யொடு போகலாம்.
ஊரா ரோடு நாமுமே
உடைத்து வைத்து வணங்கலாம்.

பால் கோவா வாங்கலாம்.
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.
நாலே கால் பணத்திலே
நடக்கும் பொம்மை வாங்கலாம்.

பாட்டி நானும் கேட்பதைப்
பட்ச மாக வாங்குவாள்.
பாட்டி யவளைக் கையுடன்
கூட்டிக் கொண்டே திரும்புவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/திருவிழா&oldid=1724587" இலிருந்து மீள்விக்கப்பட்டது